India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல், கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் பொது வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். அந்த வகையில் தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (7மணி வரை) பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சிவகாசியில் 7 செ.மீட்டரும், வேம்பக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர் AWS, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் 4 செ.மீட்டரும், சாத்தூர், விருதுநகர் பகுதியில் 3 செ.மீட்டரும், ராஜபாளையத்தில் 2 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் தான் பிரபலமானது என நினைக்கிறார்களா..? ஆர்.ஆர்.நகர் அடுத்த கன்னிசேரி புதூரில் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய் பெயர் பெற்றது. குறிப்பாக செந்நெல்குடி, பட்டம் புதூர், கன்னிசேரி புதூர் ஆகிய ஊர்களில் திருவிழா சமயங்களில் சீரனி மிட்டாய் கடைகள் அதிகமாக காணப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து, அம்பாசமுத்திரம் பகுதியில் 3 செ.மீட்டரும், ராதாபுரம், நாலுமுக்கு, பாபநாசம், கன்னடியன் கால்வாய், களக்காடு பகுதியில் 2 செ.மீட்டரும், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி பகுதியில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் கேசராபட்டி, உலகம்பட்டி, க.புதுப்பட்டி, கண்டியாநத்தம், ஆலவயல் ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு விரால், ஜிலேபி, அயிரை வகை மீன்களை பிடித்து சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, செந்துறை நகரத்தை சேர்ந்த வாக்காளா் பெருமக்களை சந்தித்து பானை சின்னத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் இன்று (13.4.2024) வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி இன்று சாத்தான்குளத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது பெரியதாழை அருகே வைத்து அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை இட்டனர். சோதனை முடிந்ததும் பறக்கும் படை அதிகாரிகளிடம் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு பகுதியில் உள்ள பனந்தோப்பு தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி இன்று நடைபெற்றது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி அறிவுறுத்தலில் நடைபெற்ற தூய்மை பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.