India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சுழி அருகே தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு(23). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக பிரதீப் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தினேஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. திருச்சுழி போலீசார் நேற்று 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகே கீழக்கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (32). இவர் சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பலரிடம் கடன் வாங்கி, பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் சாவடியில் மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் தற்போது மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம், கடலூர் வெளிசெம்மண்டலம் வி.எஸ்.எல். நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு மே 1ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் உடனுறை ஶ்ரீ மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 26,85,338 யும், நகைகளாக 256 கிராம் தங்கமும், 51 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது .

கோவை – தன்பாத் இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவையில் இருந்து ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21,28 ஆகிய தேதிகளில் புறப்படும். மறு மார்க்கத்தில் ஏப்ரல் 29,மே 6,13,20,27, ஜீன் 3,10,17,24 ஜுலை 1ம் தேதியில் புறப்படுகிறது.

தேவிபட்டினம் சேர்ந்த முகமது பிலால் என்பவர் வீட்டின் மேல் செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க தேவிபட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி மனு செய்தார். இதற்கு வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு, வயர்மேன் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் செல்வி ஆகியோர் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மாமனாருக்கும் உறவினர் பாண்டியனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. கணேசன் மாமனாருக்கு ஆதரவாக பேசி அவரைக் காப்பாற்ற முயன்றார். அதனால் கோபமடைந்த பாண்டியன் கையில் இருந்த அரிவாளால் கணேசனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

ஈரோடு இரயில் நிலையம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. எனவே போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை(ஏப்.27) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வெட்டுவெந்நி, சென்னித்தோட்டம், பல்லன்விளை, புளியன்விளாகம், காரவிளை, மலையரம், கல்லறவிளை, ஆலம்பாறை, விளசேரி, குழிச்சாணி, அம்பேற்றின்காலை , மணலுக்காலை , சாணி, மலையடி, தகரவிளை, புரவூர், மணிவிளை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.