Tamilnadu

News March 24, 2024

விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

News March 24, 2024

திருச்சியில் தயார் நிலையில்…

image

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று (24.03.2024) நடைபெற உள்ளது.

News March 24, 2024

திமுக வேட்பாளர் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

News March 24, 2024

நாமக்கல்: மருத்துவ முகாமில் பொது மக்கள் பங்கேற்பு

image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சித்திரம் பவுண்டேஷன் வாசன் ஐ கேர் மணிபால் ஹாஸ்பிடல் சார்பாக இலவச பொது மருத்துவம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர். இந்நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ராஜேஷ் கார்த்திகேயன்,பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

பாபநாசத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது…!

image

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள்
கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News March 24, 2024

கடலூரில் இன்று பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் அறிமுக கூட்டம், கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாமக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்வதோடு கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

News March 24, 2024

20,000 பேர் அஞ்சல் வாக்கு அளிக்க ஏற்பாடு!

image

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

News March 24, 2024

தென்காசியில் இந்திய கூட்டணி வேட்பாளா் காலையில் அறிமுக கூட்டம்

image

இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் அறிமுகக் கூட்டம் இன்று காலையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

News March 24, 2024

நெல்லை; நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நெல்லையில் சத்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 17 வயது சிறுமிக்கு அவருடைய அக்காள் கணவர் திருவிழாவின் நேரத்தின் போது வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்காள் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!