India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வருகின்ற 28ஆம் தேதி உலக நடன தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடன போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி இன்று (ஏப்.26) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகபட்சமாக வெண்பன்றி வகைகள் பெரிய அளவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இத்தடுப்பூசி பணி மூன்று மாத வயதிற்கு மேல் உள்ள சினையற்ற பன்றிகளுக்கு மே 23 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது . இத்தடுப்பூசியை செலுத்துவதால் பன்றிகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள பாத்திமா நகர் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் இன்று உயிரிழந்தனர். திருவள்ளூரை சேர்ந்த கணேஷ்பாபு(58), சென்னையை சேர்ந்த ரவி(47) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். மேலும் பாலமுருகன்(44), மதன்குமார்(42) ஆகியோர் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் செக்போஸ்ட் அமைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான படந்தாலுமூடு செக் – போஸ்டில் இந்த முகாம் துவங்கப்பட்டுள்ளது. முகாம் 90 நாட்கள் செயல் படும் என அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் காணாமல் போய் விட்டதாக கூறி புகார் கொடுத்து இருந்தனர். உடனடியாக சைபர்கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.11,10,544 மதிப்பிலான 72 செல்போன்கள், கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதன் உரிமையாளர்களிடம், ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் இன்று வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஏப்.26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு ஆலோசனை நடத்தினார்.

நாட்றம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரி ராமன் வட்டத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் இன்று தனது மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் நடைபெற உள்ளது. வரும் மே 1 முதல் மே 11 வரை ஓவியம், கலை, போஸ்டர் தயாரித்தல், இணைய வழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற உள்ளன. எனவே பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 2ம் தேதி முதல் விழுப்புரம் – மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரையும்.மே 3ம் தேதி முதல் மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில் திருவாரூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06877 விழுப்புரம் – திருவாரூர் ரயில், விழுப்புரத்தில் இருந்து மாலை 6.25க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 10.45க்கு திருவாரூர் சென்றடையும் என செய்தி வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறையில் முன்பகை காரணமாக கனகசபை என்பவரை ரமேஷ் மற்றும் அஜித்குமார் பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த கனகசபை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக அவரது மனைவி பிரபாவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரமேஷ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.