Tamilnadu

News April 6, 2024

மாமல்லையில் புதிதாக அலங்கரிக்கும் சுதை சிற்பங்கள்

image

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் ‘அர்பன் ஹட்’ எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகம் மாமல்லபுரத்தில் உள்ளது.வாயிலில் பயணியரை வரவேற்கும் கரக நாட்டியக் கலைஞர்கள், வளாகத்தில் இளைஞர்கள் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, ஏரில் பூட்டப்பட்ட மாடுகள், மாட்டு வண்டி, மான்கள், கொக்குகள் ஆகிய சுதை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

News April 6, 2024

கணக்கில் முரண்பாடு ஏற்பட்டதாக ரூ.25 லட்சம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி காஞ்புரம் மாவட்டம் வாலாஜாபாத் ரவுண்டானா அருகே, ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சகுந்தலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று(ஏப்.5) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, பணத்திற்கும் கணக்கிற்கு முரண்பாடு ஏற்பட்டதாக ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

News April 6, 2024

நாகர்கோவிலில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று(ஏப்.6) I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விஜய்வசந்த், “பார்ட் டைம் எம்பி என பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார்; ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்பியாக பணியாற்றினேன்; அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்தெடுங்கள் என்றார்.

News April 6, 2024

ஈரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் விழா இன்று நடைபெற உள்ளது. எனவே இன்று மதியம் 2 மணிக்கு ஈரோடு நகரில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்-பி. எஸ்.பார்க்-ஈஸ்வரன் கோயில் வீதி, ஜி. எச் ரவுண்டானா, ஸ்வஸ்திக் ரவுண்டானா, மணிக்கூண்டு, ஆர்கேவி ரோடு, அக்ரஹாரம் வீதி வழியே இன்று போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது.

News April 6, 2024

திருச்செந்தூரில் ஏப்.14 இல் கொடியேற்றம்

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வரும் 14 ஆம் தேதி விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவானது வரும் 14 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினம்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

நாமக்கல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 105.8 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 6, 2024

இந்திய கூட்டணி பிரச்சாரக் கூட்டம்

image

செங்கத்தில் நேற்று இரவு இந்தியா கூட்டணியின் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமை தாங்கினார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.
ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

image

ஆம்பூர் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

கடலூர் மீன் அங்காடியில் நா.த.க-வினர் வாக்கு சேகரிப்பு

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்திற்கு ஆதரவாக கடலூர், மஞ்சக்குப்பம் மீன் அங்காடி மற்றும் கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

News April 6, 2024

கொடைக்கானலில் பகுதியில் காட்டுத் தீ

image

கொடைக்கானல் எம்.எம்.தெருவில் உள்ள புதா் பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதைத் தொடா்ந்து கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை – மன்னவனூா் செல்லும் வழியில் உள்ள வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.

error: Content is protected !!