India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் உரிமை பறிபோகும். மகளிர் உரிமைத்தொகைக்கு ஆபத்து ஏற்படும்.100 நாள் வேலை திட்டத்தில் சிக்கல் வரும் என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்தார். மத்திய அரசை எதிரியாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பழனி தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில், விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையால் இன்று பசுமாடு சிரமம் இன்றி கன்றை ஈன்றது. ஆனால், கன்று 6 கால்களுடன் பிறந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்தனர் . இந்த அதிசய கன்று குட்டி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எல்லையான செ.புதூரில் இருந்து காஞ்சிவாய் வரை 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, கோழி, பன்றிகளை உள்ளே அடைத்து 5 கூண்டுகளையும் ஆங்காங்கே வைத்துள்ளோம் என கும்பகோணம் வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சிறுத்தை தொடர்பான வதந்திகளையோ செய்திகளையோ பரப்ப வேண்டாம் என்று அவர் கூறினார்.

சென்னை: பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நாளை ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நாளை(ஏப்.10) காலை மதுரை வரும் அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிற்பகலில் ராமநாதபுரம் வந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 % நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ராட்சத விழிப்புணர்வு பலூன் இன்று பறக்க விடப்பட்டது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பறக்க விட்டார். இந்நிகழ்ச்சிகள் பயிற்சி கலெக்டர் விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்தது. வருகின்ற 15ஆம் தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.