India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீழ்பெண்ணாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024 மக்களவை தேர்தலை தபால் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர். மேலும், தபால் வாக்கு சேகரிப்பதில் குளறுபடிகள் ஏதும் இருக்கக் கூடாது என எச்சரித்தார்.

வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரியில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ப்பகராஜ் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தல் தபால் வாக்கு பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தில் வேட்டைகாரன் கோவில் புறவி எடுப்பு திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் வேட்டைகாரன் சுவாமி மற்றும் குதிரை, மதலை சிலைகள் நத்தம் அவுட்டர் பகுதியில் கண் திறக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து. இதில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியை தரிசித்தனர்.

கேரள நகை வியாபாரி ஒருவர் 350 பவுன் தங்க நகைகளுடன் திருவனந்தபுரம் – சென்னை ரயிலில் பயணம் செய்துள்ளார். இன்று(ஏப்.6) ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது, 350 பவுன் நகைகள் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினரான தனியார் ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஏப்.7) அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3.72 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்து நிலையில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் இன்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்டது. மேலும் சிறுத்தையின் காலடித்தடங்கள் உள்ளதால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் இன்று வாக்கு சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் தலைமை வகித்தார். இதில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஜெயசீலன் விளக்கினர்.

தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் கொளுத்துகிறது. குற்றாலம் மலைப்பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவிகளில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. பிரதான அருவி பாறையாக காட்சி அளிக்கிறது. இன்று (ஏப்ரல்.7) ஞாயிறு விடுமுறை கொண்டாட குற்றாலம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மக்களவைத் 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா இன்று (7.4.2024) பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. இதை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிக்கும் என மொத்தம் 9 தொகுதிக்கு தபால் வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இதில் தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
Sorry, no posts matched your criteria.