Tamilnadu

News April 9, 2024

திருப்பூர்: கோர விபத்து ! 4 பேர் படுகாயம்

image

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் இன்று (ஏப்ரல்.9) பாண்டிச்சேரியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற கார், ஒரு வழி பாதையில் எதிரே வந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த நஜீம் (35) ஜாஸ்மின்(30), இஜா(5),
மற்றும் இஹான் (2) ஆகிய நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

News April 9, 2024

சிவகங்கை: எம்எல்ஏ காரில் 514 தொப்பிகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி காவல் சோதனை சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த கருப்பு, சிவப்பு நிற 514 தொப்பிகளை பறிமுதல் செய்தனர்.

News April 9, 2024

நாமக்கல்லில் வெப்பநிலை அதிகரிப்பு

image

நாமக்கல்லில் வெப்பம் 40.0 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 9, 2024

காஞ்சிபுரம் அருகே தீவிர சோதனை

image

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்களை உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை பாலாற்று கரையோரம் வட்டாட்சியர் அலுவலருடன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் போலீசார உதவி உடன் பந்தல் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 9, 2024

கன்னியாகுமரி அருகே அரிவாள் வெட்டு

image

குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர். 

News April 9, 2024

தி.மலை: சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

image

ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

News April 9, 2024

பிரதமர் வருகை: கோவையில் ரெட் ஜோன்

image

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 9, 2024

கடலூர்: திருமாவளவன் பாஜகவை சாடி பிரச்சாரம்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் உரிமை பறிபோகும். மகளிர் உரிமைத்தொகைக்கு ஆபத்து ஏற்படும்.100 நாள் வேலை திட்டத்தில் சிக்கல் வரும் என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைத்தார். மத்திய அரசை எதிரியாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

News April 9, 2024

திண்டுக்கல்: 6 கால்களுடன் பிறந்த கன்று குட்டி

image

பழனி தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  சக்திவேல். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில், விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையால் இன்று பசுமாடு சிரமம் இன்றி கன்றை ஈன்றது. ஆனால், கன்று 6 கால்களுடன் பிறந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்தனர் . இந்த அதிசய கன்று குட்டி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

News April 9, 2024

தஞ்சாவூர்: 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

image

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் மாவட்ட எல்லையான செ.புதூரில் இருந்து காஞ்சிவாய் வரை 25 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆடு, கோழி, பன்றிகளை உள்ளே அடைத்து 5 கூண்டுகளையும் ஆங்காங்கே வைத்துள்ளோம் என கும்பகோணம் வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார். சிறுத்தை தொடர்பான வதந்திகளையோ செய்திகளையோ பரப்ப வேண்டாம் என்று அவர் கூறினார்.

error: Content is protected !!