India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போடிநாயக்கனூர் ரயில்வே நிலையத்தில் இன்று சென்னையிலிருந்து கரூர், ஈரோடு, மதுரை மார்க்கமாக போடிநாயக்கனூர் வந்த ரயிலில் வந்த பயணிகளிடம் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அனுமதி இன்றி கொண்டுவரப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகர காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவும், குகை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.

சங்கரன்கோவிலில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்ற இஸ்லாமியர்களிடம் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையிலான அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பழனி அடுத்த ஆயக்குடியில் காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக நல அறக்கட்டளை சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிர்வாக இயக்குனர் அஜ்மத் அலி தலைமையில் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு ரமலான் பண்டிகை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சாவடியில் 1,875 மாநகர காவலர்களும் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த சுமார் 2,335 காவலர்கள் என மொத்தம் 4,210 பேர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தில் ஈத்கா மைதானத்தில் ஏராளமான இசுலாமியர்கள் ஒன்று கூடி இன்று ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் வந்தவாசி பகுதியின் பல்வேறு இடங்களில் தொழுகை நடைபெற்றது

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமை ஆதினத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத கார்த்திகை ஒட்டி இன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு 21 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் சண்முகார்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ரம்ஜானை முன்னிட்டு இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள். இந்நாள் போல் எந்நாளும் இஸ்லாம் பெருங்குடி மக்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும். மேலும், ஒவ்வொரு இஸ்லாமியர்களும் சாதி மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” குறிப்பிட்டுள்ளார்.

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலகம் எதிரில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர் தேர்தல் விதிகளுக்கு உட்படாமல் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இன்று கட்சி பேனர் அகற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.