India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம், மெய்யனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

தூத்துக்குடியில் இருந்து தினசரி மைசூர், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்திலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பயணச்சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர ரயில் ஒன்று இயக்க வேண்டும், காலையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக மேலப்பாளையத்தில் நேற்று (ஏப்.11) இரவு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அவர் பேசுகையில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கை சின்னம் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் வைத்திருப்போர் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்,பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆட்சியர் அனிமேரி அறிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்ட கலைத்துறை சார்பில் உதகை அரசாங்க பூங்காவில் நேற்று (ஏப்.11) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 240 மலர் தொட்டிகளை கொண்டு ‘ஏப்ரல் 19’ வடிவமைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளிடம் கலெக்டர், தவறாமல் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள கூட்டரங்கில், காவல்துறை அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யும் பொருட்டு சிறப்பு வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 627 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா, மாவட்ட ஆட்சியர் உடன் தேர்தல் புறக்கணிப்பை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நாங்கள், வாக்களித்தால் என்ன பயன் என இருக்கு என்றனர்.

சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தினமும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே கேட் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் பழுதடைந்து,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம் எம்.பாலப்பட்டி ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெற்றோர் கூறிய நிலையில், குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரான பெயர் தமிழ்செல்வன் என்று சூட்டினார்.

பாலக்கோடு அருகே குண்டுபள்ளம் கிராமத்தில் சிவலிங்கம்(65) என்பவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது மனைவி நன்றாக வேலை செய்ய வலியுறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடைந்து அருகில் இருந்த உலக்கையால் தலையில் அடித்து, கழுத்தை கொடுவாளால் அறுத்துக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி சிவலிங்கத்தை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.