Tamilnadu

News April 12, 2024

மயிலாடுதுறை: தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாறுவார்த்தலை பகுதியில் இன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ பி மகாபாரதி உத்தரவின் பேரில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் மயிலாடுதுறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்டோர் வாகன சோதனை செய்தனர்.

News April 12, 2024

பொதுமக்களுக்கு அழைப்பிதழ்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுமித்ரா உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் இன்று திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அந்தியூர் தொகுதி, கடுக்காம்பாளையம் கிராமத்தில் உள்ள கடைகள் விவசாய நிலங்களில் வேலை செய்யக்கூடிய விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வரும் 19ஆம் தேதி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கினர்.

News April 12, 2024

காஞ்சிபுரம் வருகிறார் முதலமைச்சர்

image

காஞ்சிபுரம், படப்பை அருகே கரசங்கால் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

News April 12, 2024

சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்த கலெக்டர்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 12) அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி மேற்கொண்டனர்.

News April 12, 2024

கடலூரில் காவல்துறையினர் தபால் வாக்கு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு இன்று தபால் வாக்கு பதிவு நடத்தப்பட்டது.இதில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தபால் வாக்கினை செலுத்தினார்.அப்பொழுது, கலெக்டர் அருண் தம்புராஜ் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் உடன் இருந்தனர்.அது மட்டும் இன்றி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 810 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்.

News April 12, 2024

கூரை வீடு எரிந்த விவகாரம்; வெடிக்கடைக்கு சீல்

image

பாஜகவினர் வெடி வைத்து நேற்று குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விஏஓ வீரமணி கொடுத்த புகார் என இரண்டு வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடியை விற்பனை செய்த வெடிக்கடையினை வருவாய் துறையினர் இன்று பூட்டி சீல் வைத்தனர்.

News April 12, 2024

ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News April 12, 2024

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம்

image

மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான (Micro observer) இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்ரல் 11) நடந்தது. இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசினார்.

News April 12, 2024

திருப்பூரில் தபால் வாக்குப்பதிவு

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய முதல்நிலை காவலர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை ஏராளமானவர்கள் இன்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

News April 12, 2024

தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!