Tamilnadu

News April 13, 2024

காவிரி ஆற்றில் தேர்தல் விழிப்புணர்வு

image

திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ள மணல் சிற்பத்தையும், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் இன்று பார்வையிட்டார்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை மாணவ, மாணவிகள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

News April 13, 2024

சுயேட்சை வேட்பாளர் பாதுகாப்பு வேண்டி கண்ணீருடன் புகார் 

image

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று (ஏப்ரல்.13) வந்த நூர் முகமது, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும் இது நாள் வரை காவல்துறையினர் பாதுக்காப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து புகார் அளித்தார்.

News April 13, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கிய எஸ்பி

image

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு மக்கான் சிக்னல் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  இன்று (ஏப்ரல் 13) நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

காவலர்கள் வாக்கு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை(14.4.24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், 3 இடங்களில் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றோடு முடிந்த நிலையில் மேலும், தேவைப்பட்டால் கால அவசாகம் நீட்டிக்கப்படும் என்றார்.

News April 13, 2024

கலெக்டர் முன்னிலையில் ஓட்டு பதிவு

image

நீலகிரி காவல் துறையினருக்கான தபால் வாக்கு பதிவு, உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்.12) நடைபெற்றது. காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்துவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேரில் பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் கெளசிக், ஆட்சியரின் உதவியாளர் சுரேஷ்கண்ணன் உடனிருந்தனர்.

News April 13, 2024

மதுரை: ரயிலில் சிக்கிய தம்பதி படுகாயம்

image

உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை(35), மனைவி ஜெயலட்சுமி(28).
நேற்று நாகர்கோவில் செல்வதற்காக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவை – நாகர்கோவில் ரயிலில் ஜெயலட்சுமி ஏறியபோது ரயில் கிளம்பியது. இதனால் ரயிலில் சிக்கி அவரது இரு கால்களும் துண்டாகின. காப்பாற்ற முயன்ற சிங்கதுரையின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

News April 13, 2024

லட்சக்கணக்கில் மோசடி: மூவர் மீது வழக்கு பதிவு

image

விருதுநகர் ஆணைக் குழாய் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(24). இவரிடம் பொதுப்பணி துறையில் ஜூனியர் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த ரவீந்திரன், கோவையைச் சேர்ந்த உஷாராணி, காஞ்சிபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோர் 6.85 லட்சத்தை பெற்று போலி நியமன ஆணையை வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஊரக போலீசார் நேற்று 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 13, 2024

சம்பளத்துடன் விடுமுறை வழங்க ஆட்சியர் உத்தரவு

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 19.04.2024 அன்று தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News April 13, 2024

திருச்சியில் 5 நாள் விடுமுறை: வெளியான அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடப்படும். மேலும் மகாவீர் ஜெயந்தியான ஏப்ரல் 21, மே 1ஆம் தேதி ஆகிய நாள்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!