Tamilnadu

News April 13, 2024

நெல்லையில் நாளை அதிசய நிகழ்வு 

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நிர்வாகம் இன்று (ஏப்.13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை காலை 6 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு நடைபெற இருககிறது . முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 5 மணிக்கு நடைபெறும் இன்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 13, 2024

பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ள அழைப்பு!

image

மதுரை பாத்திமா கல்லுாரி வெளிநாட்டு மொழிகள் மையத்தில் பிரெஞ்சு மொழி இலவசமாக கற்றுத் தரப்படுகிறது. ஏப்.15 முதல் துவங்கும் இந்த பயிற்சி வகுப்பில் ஜெர்மன் மொழி பேச, எழுத கற்றுத்தரப்படுகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் சேரலாம் எனவும் சர்வதேச அளவில் தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (98421 09298) என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம்.

News April 13, 2024

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

image

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 150 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பயின்று வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைக்கு நோயாளிகள் இல்லை, ஆபரேஷன் தியேட்டரை பார்வையிட அனுமதியில்லை நூலகத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர யாருக்கும் புத்தகங்கள் இல்லை போன்ற குறைகள் குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் “உன்னை மதுரை எய்ம்ஸில் யார் சேரச் சொன்னது” என்று பதில் சொல்வதால் மாணவர்கள் வகுப்புகளை இன்று புறக்கணித்துள்ளனர் .

News April 13, 2024

திருப்பத்தூரில் தபால் வாக்கு

image

தி.மலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் வாக்கு மையத்தை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 13, 2024

கோட்டூர்: பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக எஸ்ஜிஎம் ரமேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோட்டூரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் கோட்டூர் பாஜக ஒன்றிய தலைவர் அரவிந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News April 13, 2024

ஈரோட்டில் விழிப்புணர்வு

image

தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்ட இளைஞரணி மற்றும் தமிழரண் மாணவர்கள் அமைப்பு ஆகியன சார்பில், அன்னைத் தமிழில் வணிகப் பெயர் பலகைகளை மாற்றுவோம், எங்கும் தமிழ், எதிலும் தமிழை நிலை பெறச் செய்வோம் எனும் முழக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.

News April 13, 2024

அரியலூர்: வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி

image

அதிமுக சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரகாசனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரியலூர் மாநகரில் பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மேலும் அவர் பேசியதாவது, அதிமுகவை யாரும் மிரட்டிப் பார்க்க முடியாது. எந்த பூச்சாண்டிக்கும்,  அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். உடன் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

மத்திய அரசை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றவேண்டும்

image

சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டனூர், புதுவயல், சாக்கவயல் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழர்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. அதனால் அவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்றார்.

News April 13, 2024

காங்.கட்சி தேசிய தலைவர் வருகையொட்டி ஆலோசனை

image

புதுச்சேரி மக்களவை வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே 15 ஆம் தேதி புதுவை வருகிறார். அதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு பணி குறித்து முன்னாள் துணை சபாநாயகர் பாலன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது.

News April 13, 2024

நாகப்பட்டினம்: வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

image

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் சாட்டியக்குடி மற்றும் வலிவலம் ஊராட்சியில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.

error: Content is protected !!