Tamilnadu

News April 19, 2024

ஸ்ரீவி: குமாஸ்தா கொலை வழக்கில் இளைஞர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவர் குமஸ்தா வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தெய்வனையை தவறாக பேசிய புகாரில், வினோத்தை ஸ்ரீவி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாரிமுத்து புகாரை வாபஸ் பெறுமாறு வினோத் மிரட்டி உள்ளார். கடந்த 2ம் தேதி இரவு மாரிமுத்துவை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். அவரை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு வினோத்தை கைது செய்தனர்.

News April 19, 2024

முதன்முறை வாக்களித்த இளம் வாக்காளர்கள்

image

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்று வருகிறது இதை ஒட்டி இன்று 19.04.2024 முதன்முறை வாக்களித்த இளம் வாக்காளர்கள், முதன்முறையாக வாக்களிப்பது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

News April 19, 2024

இளம் வாக்காளர் விரலுக்கு மை வைத்த பின்பு வீட்டுக்கு சென்றதால் பரபரப்பு

image

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணாம்பட்டி குள்ளனூர் அங்கன்வாடி மையம் பாகம் எண் 170ல் காலை சுமார் 10 மணியளவில், இளம் பெண் வாக்காளர் ஒருவர் காலையில் வாக்கு செலுத்துவதற்கு விரலுக்கு மை வைத்த பிறகு தனது வாக்கை பதிவு செய்யாமல் வீட்டுக்கு சென்று விட்டதாகவும், அவரை தொலைபேசியில் அழைத்து சுமார் அரை மணி நேரம் கழித்து தனது வாக்கை செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்ததால் சிறிது நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.

News April 19, 2024

நீலகிரி தொகுதி 3 மணி நிலவரம்

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள்  14 இலட்சத்து 28 ஆயிரத்து 252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  நீலகிரி தொகுதியில் இன்று வாக்குபதிவு நிலவரம் காலை  9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணிக்கு  40.88 சதவிகிதம். அதைதொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரம் 53.02 சதவிதம் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

தஞ்சாவூர் : நாளை மின் தடை அறிவிப்பு

image

தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைதெரு , நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரஸ் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (20-ந்தேதி) காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 19, 2024

புதுக்கோட்டை அருகே தேர்தல் புறக்கணிப்பு

image

சிவகங்கை லோக்சபா தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா தேக்காட்டூர் ஊராட்சியில் சிவபுரம்,கீழ,,மேலத்தேமுத்துப்பட்டி,இளங்குடிப்பட்டி,சத்திரம், மழுக்கன்பட்டி ஆகிய கிராமங்களை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். அனைத்து கட்சிகள், கிராம மக்கள் முடிவுசெய்து ஓட்டுப்போட 4 பேரைத்தவிர யாரும் வராததால் வெறிச்சோடி கிடந்தது.

News April 19, 2024

கடலூரை பாமக கைப்பற்றும்: தங்கர்பச்சான் 

image

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் கூறுகையில் நான் மற்ற வேட்பாளர்கள் போல உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் என்று கூறவில்லை. மாறாக தகுதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினேன். முதல் முறையாக இம்முறை கடலூர் பாராளுமன்ற தொகுதியை பாமக கைப்பற்றும் என்றும், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று வேட்பாளர் தங்கர்பச்சான் கூறினார்

News April 19, 2024

மனம் மாறி வாக்களித்த மக்கள்!

image

பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகை பகுதியில் பாராளுமன்ற தேர்தல் வாக்கின்போது அப்பகுதி வாக்காளர்கள் இப்பகுதிக்கு பேருந்து வசதி இல்லை எனக்கோரி பலமுறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏவிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததையொட்டி தகவல் அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் வாக்களிக்க சென்றனர்.

News April 19, 2024

செங்கல்பட்டு அருகே பிரபல நடிகை 

image

ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடிகை ரம்யா பாண்டியன் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களித்த பின் தனது கையில் வைக்கப்பட்ட அடையாள மை காட்டினார்.

பின்னர் ரம்யா பாண்டியனுடன் ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.

News April 19, 2024

சேலம் வாக்குப்பதிவு நிலவரம்

image

சேலம் மக்களவைத் தொகுதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி
ஓமலூர் 61.1%, சேலம் வடக்கு 54.8%, வீரபாண்டி 64.62%, சேலம் தெற்கு 56.6%, எடப்பாடி 65.57%, சேலம் மேற்கு 54.52% மொத்த 60.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மணி நேரமே உள்ள நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

error: Content is protected !!