Tamilnadu

News January 19, 2026

நாமக்கல்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04286- 281331 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.19) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1-கிலோ) தக்காளி: ரூ.25, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.34, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.45, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News January 19, 2026

கோவை அருகே விபத்தில் பலி!

image

தேனி மாவட்டத்தை சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியது. இதில், படுகாயமடைந்து உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருளானந்த் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் கரண்ட் கட்!

image

திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன-20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, N.S.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என்று திண்டுக்கல் செயற்பொறியாளர் (மேற்கு) வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

சிவகாசி அருகே மணல் கடத்திய இருவர் கைது

image

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த வெள்ளூரை சேர்ந்த கணேசமூர்த்தி(44), குருமூர்த்தி(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளும் வாகனத்தின் டிரைவர் சுருளி தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கிராவல் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன், லாரியை பறிமுதல் செய்தனர்.

News January 19, 2026

குமரி: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

image

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வரும் இவருக்கும், ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.

News January 19, 2026

தென்காசி மாவட்ட பறவைகள் ஆர்வலர்களுக்கு வாய்ப்பு

image

தென்கசி மாவட்டத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தாமிரபரணி, பாசன குளங்களின் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கு 23ம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆய்க்குடி ஜே பி கலை அறிவியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆர்வம் உள்ள 18 வயது நிரம்பியவர்கள் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் http://forms.gle/2x4au4AubrJGZN8R7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News January 19, 2026

நீலகிரி மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News January 19, 2026

தஞ்சாவூர்: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

தஞ்சாவூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

புதுக்கோட்டை: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!