India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று 27.03.2024 ஆலோசனை நடத்தினார்கள்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபு மாவட்டத்தின் சமனிலை பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். முன்னதாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் வழிபட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இன்று (27.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக விருந்தினர் மாளிகையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் பார்வையாளர் பூபேந்திர எஸ்.சௌத்ரி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்களுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 27) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். மேலும், இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றார். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு எதிர் எதிர் கட்சிகளான அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஒரே மேடையில் சங்கமித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசியில் இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கடைசி நாளான இன்று 24 வேட்பாளர்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தற்போது பரபரப்பாக உள்ளது. ஏற்கனவே 12 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 36 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தினம்தோறும் பல்வேறு விபத்துக்கள் குறித்தும், சாலை விதிகள் விழிப்புணர்வு குறித்தும் அறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோவை தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தையின் உயிரை பணயம் வைக்காதீர்கள்” என தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம், வழுதரெட்டி எல்லீஸ் சத்திரம் சாலையில் தனியார் பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு திடீரென தொழிற்சாலையில் உள்ள புகை போக்கி பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், விரைந்து சென்று, தீயை அணைத்தனர். மேலும், இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமாக மரக்கட்டைகள் சேமித்து வைக்கும் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் 2:30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வெள்ளனூர் கால் நிலையம் எல்லைக்குட்பட்ட வாகவாசல் வளைவு அருகில் நேற்று காலை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாததால், மளிகைக் கடைக்காரரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
Sorry, no posts matched your criteria.