India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சிற்றாறில் (கன்னியாகுமரி) – 4 செ.மீ., சிவலோகம், திற்பரப்பில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறில் தலா ஒரு செ.மீ. மழை பதிவானது.

நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதியதில் சீராம்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகியோர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும், ஸ்ரீதர் என்பவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-05) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல்15ஆம் முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீனவர்கள் 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம். இதை மீறி மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட மீனவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான இசை மற்றும் விளையாட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ரியோ ராஜ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை தலைவர், துணை தலைவர், பொருளர், இயக்குனர், கல்லூரி முதல்வர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனி அடுத்த சத்திரப்பட்டி அருகே உள்ள கிணற்றில் இன்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் இறந்த நிலையில் மிதந்து காணபட்டது. இதைக்கண்ட தோட்டத்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சத்திரப்பட்டி போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து இறந்த சடலம் மீட்கப்பட்டது. மேலும் போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் அருகே அலங்காநல்லூர் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 81). இவர் இன்று வளத்தூர் குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் கமல் குமார், நவ்நீத் மற்றும் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி முடிந்து அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த 4 பேர், நவ்நீத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கேளம்பாக்கம் மணிகண்டனை (27) கைது செய்த நிலையில், நேற்று 3 சிறுவர்களை கைது செய்தனர்.

சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை பீகாரைச் சேர்ந்த இரு வடமாநில இளைஞர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வந்தனர். திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் காயமடைந்து உயிர் இழந்தனர். ரயில்வே போலிசாருக்கு தகவல் அளித்தபின் உடலைக் கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தொகுதியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களாக 18-19 வயது நிரம்பியவர்கள் 31ஆயிரத்தி 382 பேர் உள்ளனர். அதைபோல் 20-29 வயது உடையவர்களாக 3 லட்சத்து 18ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் இளம் வாக்காளர்களின் ஓட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.