Tamilnadu

News April 8, 2024

ஒட்டன்சத்திரம்: ரமலான் நோன்பு திறப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் ஜமாத்தார்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

வாக்காளர் குடும்பங்களுக்கு அஞ்சல் அட்டை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்சியர் தர்ப்பகராஜ் முதற்கட்டமாக 1000 வாக்காளர்களின் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணியினை மேற்கொண்டார்.

News April 8, 2024

தி.மலையில் 101.8 டிகிரி வெப்பம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  வெயிலின் தாக்கத்தால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.8 டிகிரி பாரன்ஹீட் 38.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 8, 2024

தூத்துக்குடி: வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் தூத்துக்குடியில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணிக்கையும் அங்கு தான் நடைபெறவுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 8, 2024

கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது 

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதிய ரயில்வே நிலையம் மேம்பாலம் அருகே பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டி தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்பவர் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி சிறுபொட்டலமாக செய்து விற்பனை செய்து வந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை போலீசார் தினேஷ் கைது செய்து சிறையில் அடைத்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

News April 8, 2024

மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை

image

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தடை காலத்தை ஒட்டி வரும் 14ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் மீனவர்கள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்

News April 8, 2024

செங்கல்பட்டு: 2ஆம் கட்ட பயிற்சியில் ஆய்வு

image

2024 மக்களவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

News April 8, 2024

திருச்சி அருகே அகோரிகள் ஆட்டம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று சிவனடியார் அகோரிகள் தலையில் சிவ லிங்கத்தை சுமந்து நடனம் ஆடிக்கொண்டு சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்ட ருத்ராட்சம் மாலைகளை கழுத்தில் அணிந்து பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினர்.

News April 8, 2024

விருதுநகரில் 3 மணி நேரம் மழை

image

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று இரவு விருதுநகரில் 7 மணி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2024

தென்காசியில் 3 மணி நேரம் மழை

image

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று இரவு தென்காசியில் 7 மணி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!