India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையில் கனிமொழி எம்.பி யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நெல்லையைச் சேர்ந்த ராக்கெட்ராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2009-ம் ஆண்டில் வாகன சோதனையின் போது குண்டு வீசிய சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறி ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று (மார்ச் 28) விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார். அப்போது பொன்முடியின் வாகனத்தில் பானை சின்னம் இருப்பதை பார்த்த திருமா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

மக்களவை 24 தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான செல் போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹர்குன்ஜித்கௌர் I.A.S 94899 89145, அர்ஜூன் பேனர்ஜி I.R.S. 94899 89144 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது சொத்து மதிப்பினை குறிப்பிட்டு இருந்தார். அவர் 2006ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது தனது பெயரில் நகைகள் இல்லை என குறிப்பிட்டிருந்த நிலையில், தற்பொழுது 240 பவுன் நகை உள்ளதாக கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நெல்லையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து வேட்பு மனுவை திரும்ப பெற நினைக்கும் வேட்பாளர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருவங்காடு கிளை நூலகம் மற்றும் செந்தமிழ் சங்கம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி பெறுபவர்களுக்கு வாராந்திர மாதிரி தேர்வும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தேர்வை இல்லம் தேடி கல்வியின் தேர்வுகளை பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு ஏற்பு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் மனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் இளைய குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் (28.3.24) இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக இணைந்த மருத்துவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.