Tamilnadu

News August 22, 2025

தென்காசி: ஆகஸ்ட்.24 அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேலும் கட்டப்பட்டு இருக்கும் புதிய கட்டிடங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகஸ்ட் 24ஆம் தேதி பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

News August 22, 2025

மயிலாடுதுறை: கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து நேரடியாக அவர் கேட்டறிந்தார். பின்னர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டார்.

News August 22, 2025

மாமாங்கம் மேம்பாலம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது

image

சேலம்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஆக.22) திறக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,லாரி,பேருந்து ஓட்டுநர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அறவே குறையும் என எதிர்பார்ப்பு!

News August 22, 2025

தஞ்சாவூரில் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான, விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

சிவகங்கை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் நீட்டிப்பு பணி மந்தம்

image

சிவகங்கை ரயில் நிலையத்தில், இரண்டாவது மூன்றாவது பிளாட்பாரம் நீட்டிப்பு திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால் ரயில் பெட்டி பிளாட்பாரத்தில் தாண்டி இறங்குவதால் பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். பிளாட்பாரத்தை நீட்டித்துக் கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 22, 2025

விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் அறிவிப்பு

image

பால் உற்பத்தி செய்ய கால்நடைகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம்,பசுந்தீவனம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பால் கொள்முதல் விலை,விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை.
பசும் பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்க வேண்டும்.செப்-22ல் சேலம் ஆவின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஆர்.வேலுசாமி அறிவிப்பு

News August 22, 2025

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!

image

நாமக்கல்லில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து வெற்றிலை துளசி மாலை அணிவிக்கப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 22, 2025

ராணிப்பேட்டை காவல்துறை உதவி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மக்கள் நலன் காக்கும் உதவி எண்கள் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, அவசர உதவி 100, சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 ஆகிய எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது.

News August 22, 2025

வேலூர்: காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

image

வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் நாராயணி மருத்துவமனை இணைந்து நாளை (ஆக.23) இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்துகிறது. கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த முகாமில், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

7.5% இட ஒதுக்கீடு: சேலத்தில் 1,903 பள்ளி மாணவர்கள் பயன்!

image

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!