India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நேற்று பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில் மாவட்டத்தில் 24 மணி நேரப்படி பாபநாசம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (மே 10) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் கட்டுப்பாடுகளால் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்றாலும், இன்று உதகையில் 126வது மலர் கண்காட்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று மே 10ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அருகே உள்ள தென்காசி மாவட்டம் 92.69 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று (மே 9) சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை தொடர்ந்து இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 16,737 மாணவர்கள் மற்றும் 17,032 மாணவிகள் என மொத்தம் 33,173 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 31,594 பேர் தேர்ச்சி பெற்றனர். தற்பொழுது, திருச்சி மாவட்டம் மாநிலத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று வெளியான நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் செயல்பட்டு வரும் மவுண்ட் பார்க் பள்ளியில் படித்து வரும் சாய் ஸ்ரீ என்ற மாணவி 496 மதிப்பெண்களை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இவர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

காவேரிப்பட்டிணம் அடுத்த சுண்டகாபட்டி காந்தி கிரிக்கெட் கிளப் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 12 மணி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அது சமயம் மாவட்டத்தில் உள்ள மட்டைப்பந்து வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் 8 பரிசுகள் வழங்கப்பட உள்ளது எனக் கூறியுள்ளனர்.

வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் இன்று தலா ரூ.5 லட்சம் நிதி உதவி ஆலை சார்பில் வழங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10 ) வெளியான நிலையில் திருநெல்வேலி பேட்டை தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.n என்ற இணையதளம் மூலம் ஜூன் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.