India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.85% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 91.88 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.87 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று திருச்சி மாவட்டம் 5ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.71% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.59 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 96.57 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 4 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.17% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் 3ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.45% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.46 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மே 10) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்டு பிறகு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனால் விசாரணைக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலை செய்யப்பட்ட பிறகுதான் கேபிகே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே உவரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்துள்ள வழக்கை இன்று கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் அட்சய திருதியை விழா இன்று (மே 10) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நெல்லை, பாளை பகுதிகளில் உள்ள நகை கடைகள் காலை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. தங்க நகை மற்றும் புதிய பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகிறது. கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 92.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டு 11ஆம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம் இந்த முறை 10 இடங்கள் குறைந்து 21வது இடத்தை பெற்றுள்ளது. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 87.73 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்ற நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 21ஆம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் வெயிலின் வெப்பம் 98 டிகிரி தாண்டி மக்களை வாட்டி கொண்டிருந்த நிலையில் நேற்று பரவலாக பெய்த மழையால் கடந்த 2 தினங்கள் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. மேலும் 2 டிகிரி வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி உள்ளனர். மேலும் ஆங்காங்கே மழை பெய்யும் என அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.