India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மதுரையில் நாளை(மே 5) வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்ககங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அறிவித்துள்ளார். கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை வழங்கம்போல் செயல்படும் என கோயம்பேடு பூ மார்க்கெட் து.தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டை அருகே சின்னகம்மியம்பட்டு சேர்ந்தவர் முத்துக்குமார் .இவரது மனைவி சசிகலா ஆகிய இருவருக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி சசிகலா இன்று நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதியில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் மனைவி ஸ்ப்ளெண்டர் வண்டியை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூரில் கடந்த செப்டம்பர் மாதம் குடிசை வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை ஒரத்தி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி, ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக டில்லிபாபு என்பவரை தீயிட்டு கொளுத்தியதாக சுரேஷ்,கீர்த்திராஜன்,ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். தற்போது இறந்து கிடந்த சடலம் ஆண் அல்ல பெண் என்று டிஎன்ஏ முடிவு வந்துள்ளதால் போலீசார் குழம்பியுள்ளனர்

குற்றால அருவிகள், தென்காசியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகள் ஆகும். அதில் முக்கிய அருவியாக மெயின் அருவி உள்ளது. இவ்வருவியில் பருவ காலங்களில் தண்ணீர் அர்ப்பரித்து கொட்டும். இப்பகுதியிலேயே சங்கு வடிவில் உள்ள குற்றாலநாதர் கோவில், மற்றும் பல சிவன் கோவில்கள் உள்ளன. இந்த மூலிகை மலையிலிருந்து வரும் அருவில் குளிப்பதால் நோய்கள் விலகும் என்ற நம்பிக்கை இன்றவும் நம்பப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ( உயிருடன்) கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.3 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ கறி கோழியின் விலை ரூ.127 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் ஒரு கிலோ முட்டை கோழி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

விழுப்புரத்தில் பிசியோதெரபி சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியிடம் பிசியோதெரபி மருத்துவர் அத்துமீறி தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதையடுத்து மாணவி தரப்பில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மருத்துவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.

கண்ணனூரை சேர்ந்த தினேஷ்குமார்.அப்பகுதியில் ஹைப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.அவர் நேற்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது மணிகண்டன், விக்னேஸ்வரன், நேதாஜி, ரமேஷ் ஆகிய நான்கு பேர் அங்கு இருந்த சில பொருட்களை திருடி செல்ல முயன்றனர். அப்போது தினேஷ் குமார் அதனைக் கேட்டபோது அவர்கள் மிரட்டி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (65).அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் 11 ஆண்டுகளாக காவலாளியாக பணி செய்துள்ளார்.கடந்த 10 மாதத்திற்கு முன் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அய்யனார் அவருக்கான வருங்கால வைப்பு நிதியை பெற 10 மாதமாக முயற்சித்தும் கிடைக்காத விரக்தி ஆலைக்குள் இன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடுகபட்டி வள்ளுவர் தெரு உறவினர்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் மறுபூஜையை முன்னிட்டு அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 3 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை விழா குழுவினர் வழங்கி கௌரவப்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.