India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதுரை, தஞ்சை, கரூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சென்னை- தஞ்சை பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கரூர் தொல்லியல் அருங்காட்சியகம் கரூர் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. கரூர் பகுதியில் 1973,1977,1993 காலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அவ்வாய்வில் கிடைத்த ரோமானியர், சேரர், சோழர், பாண்டியர்களின் காசுகள், பல்லவர் காசுகள், பிற்கால பாண்டியர், ராசராசன், நாயக்கர் கால காசுகளை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். ஓலைச்சுவடிகள், செப்புத் தட்டுகள் போன்றவையும் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த விஐபி நகரைச் சேர்ந்த தம்பதி ராஜாராம் (68) – லட்சுமி (58), நேற்று காலை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வீடு வாடகைக்கு வேண்டும் என கூறியுள்ளார். லட்சுமி எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்நோயாளிகளிடம் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுவாக மருத்துவ ஆலோசனைக்காக காத்திருந்த முதியவரிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.கோபிநாத் இருந்தார்.

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 25.04.2024 முதல் 29.04.2024 வரை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் under 10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிக்கா இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 வெற்றிகளை பெற்று தங்கம் வென்று உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி மின்னணு இயந்திரங்களை நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா இன்று திருச்செங்கோடு வட்டம், எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம், ஆற்றுப்படுகைகளில் அரசு அனுமதியின்றி நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி இன்று (ஏப்ரல்-29) பாமக சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ்பர்க் கோட்டை உள்ளது. தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மே, ஜூன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ஓசோன் ஆற்று வீசும். மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது. இந்த கடற்கரைக்கு மக்கள் வருகை அதிகமாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். தினசரி வெப்பநிலை 105.5 தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்ப அலை வீசி வருவதால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
Sorry, no posts matched your criteria.