India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

2024 ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது எதிர்வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2024க்கு தகுதியானவர்கள் (www.sdattn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1 மணிக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து உஷாரான விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருச்சி விமான நிலையம் முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அரசு மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று உடல் நலப் பரிசோதனை முகாம் நடைபெற்றது . தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு 146 மாணவர்களுக்கு உடல் நல பரிசோதனை செய்தனர். மேலும் இந்த முகாமினை ஒட்டி மாணவர்களின் ரத்ததான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருப்பத்தூரை சேர்ந்த திலீப் இளைஞர் ஒருவர் சிறிய சைக்கிளில் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு சைக்கிளை ஓட்டி சென்றார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஒருபுறம் நகைப்புக்குரியதாக இருந்தாலும் பலரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். மேலும், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக திலீப் தெரிவித்தார்.

வந்தவாசி அடுத்த ஆவணியாபரம் கிராமத்தில் சிம்ம மலை மீது அமர்ந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலய சித்திரை மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. சேத்துப்பட்டு அவனியாபுரம், கொழப்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சிம்ம மலையை சுற்றி வந்தனர்.

தமிழகத்தின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றான உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1998 இல் உருவாக்கப்பட்டது. முத்துப்பேட்டை அருகே 45 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இச்சரணாலயம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வெயில் கடந்த வாரத்தில் 109.4 டிகிரி கொளுத்தியது. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இந்நிலையில், அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் வழியாக குருவரெட்டியூர் செல்லும் சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள், பார்கள் மூடி வைக்கப்படும். சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் இரயில் வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள (old employment office) ல் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சிக்கான அட்மிஷன் இன்று (29.4.2024) நடைபெறுகிறது. இப்பயிற்சியானது 2மாத கால நடைபெறும். இப்பயிற்சி சேர விரும்புவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி ஆனது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.