Tamilnadu

News July 30, 2024

ஜாபர்சாதிக் மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

image

சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து ஜாபர்சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் சகோதர் முகமது சலீம் விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமின் கோரிய ஜாபர்சாதிக் மனைவி மற்றும் அவரது சகோதரரின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 30, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 30, 2024

திருச்சி முக்கொம்பு வந்தாள் காவேரி தாய்

image

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால்  அதிகப்படியான நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவேரி நீர் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முக்கொம்பு வந்தடைந்தது. இதனையடுத்து முக்கொம்புவில் இருந்து மடை திறக்கப்பட்டு காவேரி தாய் விவசாய நிலங்களை தேடி பயணிக்க தொடங்கினாள். காவேரி தாயை விவசாயிகள் மலர் தூவி வரவேற்று பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

News July 30, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

தயார் நிலையில் தீயணைப்பு படை வீரர்கள்

image

மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால், ஈரோடு காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், விபத்து மற்றும் பேரிடர் மேலாண்மை முன்னிட்டு தயார் நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் இரவு பகலாக உள்ளனர். 

News July 30, 2024

மேட்டூர் அணையை பார்வையிட்ட சௌமியா அன்புமணி

image

சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி, நீர்தேக்கப் பகுதிகளையும், உபரிநீர் போக்கி அமைந்துள்ள 16 கண்பாலம் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அதிகாரிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News July 30, 2024

எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக மிரட்டுகிறது

image

சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய செல்வப் பெருந்தகை, விசாரணை என்ற பெயரில் கெஜ்ரிவாலை கைது செய்து சித்திரவதை செய்வது எப்படி நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். யார் மீது வழக்குகள் உள்ளதோ, அவர்கள் பாஜகவில் சேர்ந்த உடன் அவை திரும்பப் பெறப்படுகிறது எனவும் விமர்சனம் செய்தார்.

News July 30, 2024

தேனியில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தின் கீழவடகரை, அழகர்நாயக்கன்பட்டி, ஜி கல்லுப்பட்டி, எண்டப்புளி ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு நாளை(ஜூலை 31) பெரியகுளம் அருகே உள்ள கல்வி குழுமம் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 30, 2024

சென்னையில் பிரபல யூடியூபர் கைது

image

நேற்று பெண் ஒருவர் தெற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில், செம்மொழி பூங்கா குறித்தும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல் செயல்களை பதிவு செய்து ‘பிரியாணி மேன்’ என்று யூடியூப் சேனலில் ஒருவர் பதிவிட்டுள்ளார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் சேனலின் உரிமையாளரான அபிஷேக் ரபி என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!