Tamilnadu

News July 10, 2024

தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். 10 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12,000 அடிப்படையில் தொகுப்பூதியம் வழங்கப்படவுள்ளது; தகுதி: வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி; முகவரி: பழங்குடியினர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை 34, திருவாரூர்.

News July 10, 2024

APPLY NOW: காலி ஆசிரியர்ப் பணியிடங்கள் 

image

மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்
நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் (தமிழ் & ஆங்கிலம்) காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதி உடையவர்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 12ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 10, 2024

8ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் www.dge.tn.gov.in இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

ஆசிரியர் போட்டி தேர்வுக்கான கண்காணிப்புகுழு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்விற்கான (SGT) முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான தேர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

News July 10, 2024

இன்னும் சற்று நேரத்தில் விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு

image

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 276 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்பதால் வாக்காளர்கள் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News July 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சீர்காழி அரசு இசை பள்ளியில் 4 வகையான நாட்டுப்புற கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜூன் 12 முதல் வழங்கப்பட உள்ளது. 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

ஒலிம்பிக் வீராங்கனைக்கு காசோலை வழங்கல்

image

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16ஆவது நபராக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தேர்வாகியுள்ளார். அதையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவருடைய விமானப் பயணச் செலவு, தங்குமிடம், உணவு, பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கி சிறப்பித்தார்.

News July 9, 2024

சிப்பாய் புரட்சியின் நினைவு தினம் அனுசரிப்பு

image

வேலூரில் 1806 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாள் இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 218ம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஜூலை 10) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் மக்கான் சிக்னல் அருகே உள்ள நினைவு தூணுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.  இதில் வேலூர் மாவட்ட மக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News July 9, 2024

பாமக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

image

நாளை விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிவுற்றது. தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி இன்று மாலை திடீர் உடல்நல கோளாறு காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை தேதி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News July 9, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை 11ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!