India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்த ஊழியர்களுக்கு மதிப்பெண்படி பதவி உயர்வு தர வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி இட ஒதுக்கீடு அடிப்படையில் துணை தாசில்தார்களுக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து செங்கை ஆட்சியர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜூலை 27க்குள் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்து தேர்ச்சி பெற்று, இந்த ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற அந்தந்தக் கல்லூரியின் சிறப்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்” என்று மாவட்ட கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு செய்த அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்படி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைமீறி காஞ்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து 3 மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் வரும் ஜுலை 27 அன்று ஆட்சியர்கள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஜூலை.30 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை.31 அன்று பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முற்பகல் 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 02.00 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம், ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகளில் 26 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாயும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாயும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் விதிமீறல் மற்றும் துணை தாசில்தாரை, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயண தொடக்க விழா இன்று புதுச்சேரி சாரம் அவ்வை திடல் ஜீவா சிலை அருகில் இருந்து தொடங்கியது. புதுச்சேரி முதல் சேலம் வரை நடைபெறும் இந்த இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை திராவிடர் கழக புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி தொடங்கி வைத்தார்.

விக்கிரவாண்டியில் 83%க்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றால், அதில் அதிமுக வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தான் அர்த்தம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியவரும். மேலும், ஜெயக்குமாருடைய கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு நேர்காணல் மூலமாக, இடஒதுக்கீடு முறையில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <

தண்டலை ஊராட்சியில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்திடம் பெண் ஒருவர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தார். அப்பெண்ணின் மனுவினை பரிசீலனை செய்து, உடனடி நடவடிக்கையாக பயிற்சியுடன் கூடிய சுய தொழில் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.