India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற புத்தக கண்காட்சியின் மூன்றாவது நாளான இன்று சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ மெய்யநாதன் கலந்து கொண்டு இசை இலக்கிய நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அரசு சார்ந்த துறையினர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக வட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை காலை இரும்புலியூரில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார். மேலும் வருகிற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்ற மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி ICSE பள்ளிகளுக்கு இடையேயான 17வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான வில்வித்தை போட்டி கரூரில் நடந்தது. இதில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ICSE பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் ஆர்.வி ஸ்ரீசரணை, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று பாராட்டினார். டிஆர்ஓ கோவிந்தராஜூலு, விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி உடன் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ககனகிரி எனும் பெரியமலைக் கோட்டை கிருஷ்ணகிரியிலிருந்து 27 கி.மீ தூரமும், ஓசூரிலிருந்து 67 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் உள்ளது. மலையேற்றம் செல்ல சிறந்த இடமாகவும் இந்த மலைக்கோட்டை உள்ளது. மலையேற்றம் மற்றும் கோவிலுக்கு செல்ல விரும்புவோர் முதலுதவி வசதியோடு சென்றால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் குதிரை சந்தையுடன் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவகர் உடன் இருந்தார்.

வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நாளை ஜூலை 30-ம் தேதி அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் கே.வி குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாண மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜூலை 29) நடத்திய சோதனையில், 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 38 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாவட்ட பள்ளி கல்வி துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆயத்த கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.