India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் கௌரிபுரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் திருக்கோயில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் குமரகுரு அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இன்று சித்தலூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழ்நாடு அணைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்கவும் கர்நாடக அரசிடம் உரிய தண்ணீரை பெற்று தரவும், மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி வரும் ஜுன் 10ம் தேதி பூம்புகாரில் துவங்கி ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணையில் நீதி கேட்டு பேரணி நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதில், கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடா்பாக நேற்று கோவை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதிவான வாக்குகள் 94 வாக்கு எண்ணும் மேஜைகளில் 134 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. செய்தியாளா்களுக்கு தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, திருவட்டார் கல்குளம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு தாலுகாக்களின் கிராம கணக்குகளை சரிபார்க்கும் “வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல்” (ஜமாபந்தி) நிகழ்ச்சியானது வரும் ஜூன் 11 முதல் 14ம் தேதி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி கீழையூர் மேற்கு ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் இருந்து திமுகவை சேர்ந்த கண்ணதாசன், பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த பரமசிவம், சிபிஎம் நடராஜன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் தலைமையில் தங்களை அதிமுக இணைத்துக் கொண்டனர்.

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாள் திருவிழா இரவு கலிவேட்டை நடைபெற்றது. 11ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போலீசார் பாது காப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் நாளை மூடப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரம், ஜெனரேட்டா்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் லிட்டா் டீசல், ஒரு லட்சம் லிட்டா் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பெட்ரோல் பங்க் அமைத்தால் ஆண்டுக்கு ரூ.1 கோடி மிச்சமாகும். எனவே ஈரோடு மாநகராட்சி சாா்பில் சம்பத் நகா் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.