Tamilnadu

News May 30, 2024

திருமயத்தில் அமித்ஷா சாமி தரிசனம்

image

திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோயில் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் இன்று மலை அமித்ஷா தரிசனம் செய்தார். இதையடுத்து மீண்டும் திருச்சிக்கு வந்து மாலை 5.25 மணிக்கு தனி விமானத்தில் திருப்பதி செல்கிறார்.திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

News May 30, 2024

ராமநாதபுரம் அரண்மனையின் சிறப்புகள்!

image

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமநாதபுரம் அரண்மனையில் இருந்துதான் சேதுபதிகள், சேது நாடு என அந்நாளில் அழைக்கப்பட்ட நிலப்பரப்பை ஆண்டு வந்தனர். கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே தோற்றமளிக்கும் இதில் இராமலிங்க விலாசம், சங்கர விலாசம், கௌரி விலாசம், அந்தப்புரம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப்பாதை, இராஜராஜஸ்வரி கோயில், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், சரசுவதி மகால் போன்றவை உள்ளன.

News May 30, 2024

போக்சோ வழக்கு: வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

image

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  குற்றவாளி ஆசிக் முகமது (எ) அல்ஆசிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். 

News May 30, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற ஜூன் மாதம் 07-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

விருதுநகர் அருகே தாக்குதல்

image

விருதுநகர்,கமுதி அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி(52).இவரது குடும்பத்தாருக்கும் திருச்சுழி அருகே அம்மன் பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று அம்மன் பட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.திருச்சுழி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News May 30, 2024

நாமக்கல்லில் கனமழை வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

News May 30, 2024

திருச்சியில் கனமழை…!

image

தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

News May 30, 2024

கோவையில் இருந்து நேரடியாக வெளிநாடுகள் செல்லலாம்

image

கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து டில்லி மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள 5 நகரங்களான நியூ ஆர், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ கனடாவில் உள்ள வான்குவார் செல்ல முடியும் என்றனர்.

News May 30, 2024

சிவகங்கை மானாமதுரையின் கடம் சிறப்பு!

image

சிவகங்கை, மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடம் உலகளவில் இசைக்கலைஞர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து தயாரிக்கின்றனர்.

News May 30, 2024

லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவு சார்பதிவாளர் கைது

image

மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!