Tamilnadu

News May 30, 2024

சேவூர் அருகே நாய்கள் கடித்ததில் மான் பலி

image

சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சியில் உள்ள குளத்தில் பெண் மான் செத்து கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் செத்துக்கிடந்த மானின் உடலை மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 2 வயதுடைய இந்த பெண் மானின் பின்பகுதியில் நாய்கள் கடித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளதாக கூறினர்.

News May 30, 2024

முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சமூக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்கேபி குரூப்ஸ், பாஸ்கர் ஜூவல்லர்ஸ், சந்திரா ஜூவல்லர்ஸ், ராம் டீவி சென்டர், சிவா மருத்துவமனை, எம்ஜிஎம் பள்ளி, வேளாங்கண்ணி பள்ளி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவுக்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

தூத்துக்குடி: முள் செடிக்குள் அழுகிய உடல்

image

தூத்துக்குடி தெர்மல் நகர் ஊரணி பகுதியில் ஒரு தனியார் கம்பெனியின் பின் புறம் முள் செடிக்குள் அழுகிய நிலையில்  அடையாளம் தெரியாத  ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கண்ணா தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊர், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News May 30, 2024

தூத்துக்குடி மக்களுக்கு இரு அறிவிப்புகள்

image

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இனிமேல் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் வெளியே சென்று அடையாமல் இங்கு சென்று பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலக அடையாள அட்டையை இருப்பிட சான்றாக பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 30, 2024

டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருதுக்கு அழைப்பு

image

 நீர், நிலம், மலை போன்ற சாகசத் துறைகளில் (Adventure Sports) இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நோர்கே தேசிய சாகச விருது (Tenzing Norgay National Adventure Award) வழங்கப்படுகிறது. இதற்கு http://awards.gov.in  எனற இணையத்தள முகவரியில் ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News May 30, 2024

தேனி: ஆட்டோவில் தவறி விழுந்த பெண் மரணம்

image

இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது தோட்டத்தின் அருகில் இறங்க முயன்ற போது ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் ஆட்டோவை எடுத்ததால் மல்லிகா கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட நிலையில், தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

News May 30, 2024

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட வந்த 2 பேர் கைது

image

கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட வந்த நந்தினியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனாவையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு தக்கலைக்கு அழைத்து சென்றுள்ளனர். கன்னியாகுமரியில் இவர்கள் உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டிருந்தனர்.

News May 30, 2024

திண்டுக்கல்: காலியான தங்கும் விடுதிகள்

image

தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகம் எங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்து உலகை முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்கள், பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல் உள்ள தங்குமிடம், கோயிலுக்கு சொந்தமான தங்குமிடம் என அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி உள்ளன.

News May 30, 2024

வெளிநாட்டு வேலைக்கு இலவச மொழி பயிற்சி

image

தர்மபுரி;வெளிநாடு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ஜெர்மன், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் செவிலியர் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதி உடையவர்கள் <>-1<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6379179200 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

திருவாரூர் மத்திய பல்கலை. வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் அறிய <>https://cutn.ac.in/<<>> என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

error: Content is protected !!