India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை தி.நகரில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, திடீர் மழை வரும்போது அதனை எதிர்கொள்ள சென்னை மட்டுமல்லாமல் எந்த நகரமாக இருந்தாலும் அதை தாங்காது. ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள சென்னை தயாராக இருக்கிறது. மழையால் பாதித்த பயிர் சேதங்களை கணக்கெடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியிருக்கிறோம் என கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வால்பாறை PTO, வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சின்னக்காலர், UPASI தேனீர் ஆராய்ச்சி நிலையம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் பொள்ளாச்சியில் 1 செ.மீட்டரும் மழைப்பதிவானது.

திருநெல்வேலியில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் 7 செ.மீ, கக்காச்சி பகுதியில் 5 செ.மீட்டரும் கொடுமுடியாறு அணை பகுதியில் 4 செ.மீ, அம்பாசமுத்திரம், சேர்வார் அணை, மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆகிய பகுதிகளில் 3 செ.மீ, நம்பியார் அணை, கன்னடியன் அணைக்கட்டு, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

தேனி மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரியாறு பகுதியில் 8 செ.மீட்டரும், தேக்கடியில் 3செ.மீட்டரும், கூடலூர், போடிநாயக்கனூரில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

கன்னியாகுமரியில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மைலாடியில் 10 செ.மீட்டரும், மாம்பழத்துறையாற்றில் 9 செ.மீட்டரும், அணைகெடங்கு, பாலமோர், துக்களாய் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும், கொட்டாரம், நாகர்கோயில், பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும், முள்ளங்கினாவிளையில் 6 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

திருப்பூரில் வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வஸ்துக்காக 40 சிறப்பு பேருந்துகள் திருப்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் என 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடியை சேர்ந்த லயன்ஸ் ஸ்டார் விளையாட்டு கிளப் குழுவினர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வைத்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதா ஜீவன் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கினார்.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாக விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் புராணக்கதைகளைக் கொண்டுள்ளது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கையில் தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தின் தேர்தெடுக்கப்பட்டு சிறிது மாற்றத்துடன் கொண்டுவரப்பட்டது. இந்த 194 அடி ராஜகோபுரத்தை விஜயநகர மன்னர் பாரதி ராயர் கட்டினார்.

கொடைக்கானலில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது தரை இறங்கும் மேக கூட்டம், முத்தமிடும் சாரல், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் என கொடைக்கானல் நகர் சுற்றுலா பயணிகளை இயற்கை சூழலால் ஈர்த்துள்ளது. நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்த போதும் ஏரியில் சுற்றுலா பயணிகள் நனைந்தும் , குடை பிடித்தப்படியும் படகுசவாரி செய்தனர்
Sorry, no posts matched your criteria.