Tamilnadu

News May 16, 2024

மதுரை: அரசு பள்ளியில் குவியும் மாணவர்கள்!

image

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 சேர்வதற்காக நேற்று நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் மாணவிகள் காத்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் செயல்படுவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

News May 16, 2024

தெப்பத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

image

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நேற்று(மே 15) திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் (பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலருமான சண்முகநாதன் ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசினார். தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலா்களும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

News May 16, 2024

தஞ்சாவூர் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பட்டுக்கோட்டை பகுதியில் 16 செ.மீட்டரும், அதிராமபட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் 11 செ.மீட்டரும் அதிராமபட்டினம் AWS-யில் 10 செ.மீட்டரும், பேராவூரணியில் 6 செ.மீட்டரும், திருவிடைமருதூரில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

News May 16, 2024

சிவகங்கை: கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்கு உபட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு மே 19 ஆம் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி ’ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில், அன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

image

திருப்பூர் மாநகரம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 16, 2024

அரசு பேருந்து ஓட்டுனர் தற்காலிக பணிநீக்கம்

image

நெல்லை, வள்ளியூரில் கன மழையின் போது ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய குமரி மாவட்டம் ராணி தோட்டம் பணிமனை அரசு பேருந்து. இந்த சம்பவம் குறித்து அரசுப்பேருந்து ஒட்டுனர் சசிகுமார் என்பரை ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

News May 16, 2024

வைகை அணை திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

image

தேனி மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது. மேலும், வைகை அணையில் இருந்து பாசன பகுதிக்கு விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

News May 16, 2024

மாஞ்சோலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த கோரிக்கை

image

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 700 குடும்பங்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எஸ்டேட்டின் குத்தகை காலம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மாஞ்சோலை எஸ்டேட் மக்களின் வாழ்வுக்காக அரசே இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News May 16, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வட தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்று(மே 16) இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீன்பிடிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புதுச்சேரி மாநில மீன்வளத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 16, 2024

ஹெல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம், கமுதி ஆயுதப்படைகளுக்குள் டூவிலரில் செல்லும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் வழங்கி ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து கால் செய்யப்படுவார்கள். அதே போன்று சட்டம்- ஒழுங்கு போலீசாரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவும் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!