India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜெயமுருகன் மற்றும் இளையராஜா என்போரின் உயிரிழப்பிற்கு விஷ சாராயம் தான் காரணம் என உறுதியாவதற்கு முன்பே இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், புதைக்கப்பட்ட ஜெயமுருகனின் உடலை கூறாய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னொருவரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளச்சாராய விற்பனையை முழுவதுமாக தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆட்சியர் மகாபாரதியிடம் இன்று மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இந்த மனுவினை வழங்கினர்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விருது பெற தகுதியானவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

2வது முறையாக தகவல் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்திற்கு முதல் முறையாக முருகன் இன்று வருகை புரிந்தார். நாமக்கல்லில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து நாமக்கல் விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்கள் அவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோதமான மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லுாரி, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலனாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பருப்பு மில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து அங்கிருந்த காவலாளியை கொலை செய்ததுடன், ரூபாய் 1,42,000 பணத்தைத் திருடிச் சென்ற வழக்கில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி அமர்ஜித் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 22) தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி பெருமாள் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோயிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் இன்று (ஜூன் 22) நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.