Tamilnadu

News May 16, 2024

நெஞ்சுவலியால் நடத்துனர் மரணம்

image

புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பேருந்து கடலூர் வந்தபோது நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் கோபால் பேருந்தை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குள் பயணிகளுடன் ஓட்டிச் சென்றார். அங்கு நடத்துனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

News May 16, 2024

சென்னையில் தோன்றிய இரட்டை வானவில்

image

சென்னையில் சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்தது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இரட்டை வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

News May 16, 2024

வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் பொறுப்பு ஏற்பு

image

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் உள்ளது. இங்கு நேற்று(மே 15) மாவட்ட உரிமையியல் நீதிபதியாக ராம் கிஷோர், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியாக செல்லையா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுக்கு வாடிப்பட்டி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 16, 2024

விவசாயிகளுக்கு கோவை கலெக்டர் அறிவுறுத்தல்

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

கொடைக்கானல்: நாளை மலர் கண்காட்சி

image

கொடைக்கானலில் வரும் (மே 17) மலா்க்கண்காட்சி , கோடைவிழா தொடங்கவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் பேன்சி, டைந்தேஸ், ஆந்தோரியம் , ஜொனி, கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 25 வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. கடந்த ஒருவாரமாக தொடா்ந்து பெய்துவரும் மழையால், மலா்ச் செடிகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், நெகிழிப் பைகள் மூலம் பாதுகாக்கபடுகின்றன

News May 16, 2024

சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு

image

புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6-வயது சிறுவனை ஸ்டெல்லா என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதனை ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸில் ஒப்படைத்தனர்.

News May 16, 2024

திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.

News May 16, 2024

நீலகிரி: கோடை மழையால் விதைப்பு பணி தீவிரம்

image

நீலகிரியில் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில்
நடப்பாண்டில் ஏப். இறுதி வரை மழை பெய்யவில்லை. இந்த மாதம் மே 4ம் தேதி துவங்கிய கோடை மழை மாவட்ட முழுவதும் அவ்வப்போது பெய்தது நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 12.69 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது
விவசாயத்திற்காக தங்கள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மலை மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

News May 16, 2024

பயணத்தின்போது உயிரிழந்த பெண் ஐடி ஊழியர்

image

சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று நேற்று(மே 15) காலை கோவை காந்திபுரம் வந்தது. இளம்பெண் ஒருவா் மட்டும் படுக்கையிலேயே இருந்துள்ளாா். அவருடன் வந்தவா்கள் அவரை தட்டி எழுப்பியபோது உயிரிழந்தது தெரியவந்தது. விரைந்து வந்த காட்டூர் போலீசார் விசாரிக்கையில், உயிரிழந்தவா் குனியமுத்தூரை சோ்ந்த ஐடி ஊழியர் மகாலட்சுமி என்பதும், உடல் நலக்குறைவால் ஊருக்கு வந்ததும் தெரிந்தது.

News May 16, 2024

ஓட்டு எண்ணும் பணி; 320 அலுவலர்களுக்கு பயிற்சி

image

தேனி  ஓட்டு எண்ணிக்கையின் போது பணிபுரிய கண்காணிப்பாளர்கள் 96 பேர், உதவியாளர்கள் 96 பேர், நுண்பார்வையாளர்கள் 96 பேர், மின்னணு ஓட்டுகளை கணக்கிட 18 பேர், தபால் ஓட்டுகளை கணக்கீட 32 பேர் என 320 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.

error: Content is protected !!