India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் மே 22-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும் என்றார்.

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.

மானாமதுரை திருப்பத்தூர் தொகுதிகளில் மாங்குளம் ,காரையூர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வருவாய்துறையிடம் இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400மீ., ஓடுதளம் ,வாலிபால்,கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான
கட்டுமான வசதிகள் செய்யப்படும்.

புதுவை தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியை கட்டாயம் பாா்க்க வேண்டிய இடமாக மத்திய அரசின் சுற்றுலாத் துறை அங்கீகரித்து உள்ளதாக கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் நேற்று தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் பசுமை புதுச்சேரி எனும் பொருளில் நகா்ப்புற காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 110- க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 7, 000 தாவரங்கள், மயில் உள்ளிட்ட 25 வகை பறவைகள், 30 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். அதில் 15,230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என மொத்தம் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியை வழங்கினார்.

கோவையில் காற்றுடன் கூடியமழை பெய்துவருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேமராக்களுக்கு யுபிஎஸ் மின்சாரத்தை சீராக வழங்கக்கூடிய கருவிகள் இன்று பொருத்தபட்டது . இதனால் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து 5 கிலோ தங்கத்தை ராமேசுவரத்துக்கு படகு மூலம் கடத்தி வந்து, அதை மதுரைக்கு காரில் கொண்டு வருவதாக நேற்று மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைமான் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட வருவாய் புலனாய்வு பிரிவினர் காரில் 5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 5 பேரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெற்கு வாயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 90 அரசு மற்றும் பள்ளியைச் சேர்ந்த 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதன்படி நான்கு அரசு பள்ளிகள், ஒன்று நகரவை பள்ளி, ஒன்று பகுதி பெரும் பள்ளி, 75 மெட்ரிக் பள்ளிகள், ஒன்பது சுய நிதி பள்ளிகள் என 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

போக்குவரத்துத்துறை புள்ளி விபரங்களின்படி கோவையில் இ-வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது. நாளொன்றுக்கு, 25க்கும் அதிகமாக இ-வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அதற்கேற்ப இ-வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும் 34 ஆக அதிகரித்து வருகிறது. திருச்சி, அவிநாசி, பாலக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் புதிதாக சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.