Tamilnadu

News May 15, 2024

ஆரணி: செல்போன் திருடிய வட மாநில வாலிபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் மழையினால் ஒதுங்கி இருந்த கூட்டத்தில், பயணிகளிடம் செல்போன் திருடிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நோனியா(22) என்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தரும அடி கொடுத்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 15, 2024

நிச்சயதார்த்தம் அன்று இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

image

கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு வீட்டில் திருமணம் நடத்த முடிவு செய்து பொதிகை நகர் பகுதியில் உறவினர் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் நிச்சயதார்த்தத்தில் வீட்டில் இருந்த இளம் பெண் காணவில்லை. இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் சிவகங்கை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

குடியிருப்பில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

image

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் EB.காலனியில் குடியிருப்பில் 4 அடி நாகப்பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் (போ) பா.வெங்கடேஷ் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.

News May 15, 2024

கல்வித்துறை சார்ந்த முன்றடுக்கு கூட்டம்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கல்வித்துறை சார்ந்த மூன்றடுக்கு குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று (மே.14) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி என பலரும் கலந்து கொண்டனர்

News May 15, 2024

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கலெக்டர்

image

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் உடையார்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் நேற்று(மே 14) ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்தார்.

News May 15, 2024

தேர்வில் தோல்வி மாணவி தற்கொலை

image

வாலாஜா, சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அப்பெண் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார் இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 15, 2024

திண்டுக்கல்: இளைஞருக்கு 20 ஆண்டு ஜெயில்

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2023ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதன்குமார்(22) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(மே 14) மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News May 15, 2024

மாம்பழம் விலை குறைவு 

image

அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த் என பல வகையான மாம்பழங்கள் சந்தைக்கு வந்தாலும் குமரி மக்களுக்கு மிகவும் பிடித்தது இம்மாவட்டத்தில் விளையும் செங்கவருக்கை மாம்பழம் ஆகும். நார்ச்சத்தும், இனிப்புச் சுவையும் மிகுந்த இப்பழம் கடந்த மாதம் ரூ.200 முதல் ரூ.250 வரை விலையில் விற்பனையானது. தற்போது செங்கவருக்கை மாம்பழம் சந்தையில் வரத்து சற்று அதிகரித்ததால் விலை குறைந்து ரூ.180க்கு விற்பனையாகிறது.

News May 15, 2024

ஜெயக்குமாரை 7 கிமீ பைக்கில் பின் தொடர்ந்தது யார்?

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமாக உயிரிழந்த வழக்கில் நாங்குநேரி டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையில் போலீசார் திசையன்விளை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை நேற்று ஆய்வு செய்தபோது 2 நபர்கள் ஒரு பைக்கில் ஜெயக்குமார் சென்ற காரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 15, 2024

சென்னை மாநகராட்சி நீர் பந்தல்கள் அகற்றம்

image

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம், ஆயிரம் விளக்கு உட்பட பல பகுதிகளில் நீர் நிரப்ப படாததால் அவை அகற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் பந்தல்களை பொதுமக்களும் கண்டு கொள்ளவில்லை மாநகராட்சியும் பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!