Tamilnadu

News May 30, 2024

பேரிஜம் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட ஒரு மாதத்துக்குப் பிறகு வனத்துறை நேற்று அனுமதி அளித்தது. பராமரிப்புப் பணிகள், யானை நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதமாக பேரிஜம் ஏரிப் பகுதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்ல வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News May 30, 2024

திருவள்ளூர்: போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

image

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தயாளன், மோனிஷ் குமார் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த யுவராஜ், மோகன் ஆகிய 4 பேரும் மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரை கடத்தி வந்தனர். திருத்தணியில் இறங்கி சென்னைக்கு பேருந்து மூலம் கடத்த காத்திருந்தனர். அப்போது அங்கே சென்ற போலீசார் அவர்களைப் பிடித்து சோதனையிட்டதில் அவர்களிடம் போதை மாத்திரை இருப்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைதுசெய்தனர்.

News May 30, 2024

நீலகிரி: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

News May 30, 2024

ராம்நாடு: முதல் மதிப்பெண்… மாணவர்களுக்கு பாராட்டு

image

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி எஸ்டிபிஐ நகர் சார்பில், சாயல்குடி பேரூராட்சி அளவில் +2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எம்.பஞ்ச கல்யாணி மற்றும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.தக்ஷ்னா ஆகியோரை எஸ்டிபிஐ கட்சி சாயல்குடி நகர் நிர்வாகிகள் உறுப்பினர் கலந்து கொண்டு நேரில் சந்தித்து பாராட்டினர்.

News May 30, 2024

விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டார்.

News May 29, 2024

வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் 10, 11 மற்றும்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற உயர்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை இன்று வழங்கினார்.

News May 29, 2024

வாக்கு எண்ணும் நாளில் கடைப்பிடிக்க வேண்டியது

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 4 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள், அவர்களின் முகவர் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். எஸ் பி கிரண்ஸ்ருதி, நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், ஏ டி எஸ் பி குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News May 29, 2024

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு ஆர்டிஒ மரியாதை

image

அரூர், மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் திருப்பூர் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வந்தவருமான முனிராஜ் என்பவர் உடல் நலம் சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து அவரது உள்ளுறுப்புகள் அவரது குடும்பத்தினரால் தானம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்க அரூர் ஆர்டி ஒ வில்சன் ராஜசேகர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News May 29, 2024

கலவை சமூக சேவையை பாராட்டி சான்று

image

பாரத ஜோதி சீனியர் சிவில் சர்ஜன் மருத்துவர் செங்கோட்டையன் சமூக சேவையை பாராட்டி கலவையில் சான்று வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலவை ஆல் இந்தியா என்வைண்ட் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சேவா ரத்னா கதிர்வேல், நிர்வாக இயக்குனர் தங்கப்பாவை தமிழரசி சிவசங்கர் மற்றும் கிருஷ்ணா கேப்சர்ஸ் நிறுவனர் கிருஷ்ணகுமார் , ஸ்டில் மனோகர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News May 29, 2024

காதலை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

image

ஆலத்தூர்: புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவருக்கு அதே ஊரைச் சார்ந்த 22 வயது வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை தாய் கண்டித்ததால் மனம் உடைந்து சிறுமி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!