Tamilnadu

News May 14, 2024

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராக்கு இவரது மகள் பாண்டிச்செல்வி எட்டாம் வகுப்பு பயிலும் போது உடல் நலக் குறைவால் மூன்று ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகளை நினைத்து வாடிக் கொண்டிருந்த தாய் ராக்கு அன்னையர் தினத்தன்று இறந்த பாண்டி செல்வியின் புகைப்பட கட்டவுட் படம் வைத்து பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார். இச்செயலால் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்

News May 14, 2024

திண்டுக்கல்: இயந்திர பயிற்சி முகாம் 

image

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதி அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரத்தினை கையாளுவது குறித்து நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

News May 14, 2024

தென்காசி அருகே நோய் பரவும் அபாயம்

image

தமிழக கேரள எல்லையான புளியரை பகுதியில் சிறுமி பேரி நீர் தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழிந்தோடும் பகுதிகளில் கேரளாவிற்கு மாடுகளை ஏற்றி சென்று விட்டு வரும் வாகனங்கள் அதன் கழிவுகளை நீர் தேசத்தினுடைய நீர் வழிந்தோடும் பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இன்று அந்த பகுதியில் கொட்டி செல்லப்பட்ட கழிவுகளில் தீ வைத்து எரித்துள்ளதால் நோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News May 14, 2024

திடீரென தீ பற்றி எரிந்த பனைமரம்

image

நெமிலி, பனப்பாக்கத்தில் இருந்து பன்னியூர் செல்லும் சாலையில் பெருவளையம் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் உள்ள பனைமரம் ஒன்று இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து வருவாய்த் துறையினர் அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பனைமரம் எப்படி தீப்பற்றி எரிந்தது என நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 14, 2024

லாரி மோதி பாய் வியாபாரி பலி

image

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்த்தவர் கோவிந்தராஜ்(பாய் வியாபாரி). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தேக்கல்நாயக்கன்பட்டி – கடத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News May 14, 2024

காஞ்சியில் 66,040 மாணவர்கள் பயன்

image

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 66,040 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர். 

News May 14, 2024

அரியலூரில் வெளுத்து வாங்கிய மழை

image

அரியலூர் மாவட்டம் செந்துறை சமத்துவபுரம், இலைக் கடம்பூர், நலனாயகபுரம்,  ஆர் எஸ் மாத்தூர், ஆலத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடை மழை இன்று பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பூமி குளிர்ந்தது.  கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

News May 14, 2024

நாமக்கல்: முன்னாள் படை வீரர்கள் ஆட்சியர் அறிவிப்பு

image

24-25ம் கல்வி ஆண்டில் கல்லூரிகளில் கலை அறிவியல் தொழிற் பட்ட பட்டப்படிப்புகள் மேற்படிப்பில் முன்னாள் படைவீரர் சார்ந்தோருக்கான உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து பயனடைய சார்ந்தோர் சான்று பெற்றிட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் மூலமோ ஆவணங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

வேலூர் மாவட்டத்தில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

வேலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 140 பள்ளிகளில் இருந்து 7762 மாணவர்களும், 8473 மாணவியரும் தேர்வு எழுதினர். இதில் 5764 மாணவர்களும், 7452 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 81.40 சதவிகிதமாகும். 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் 1 அரசுப் பள்ளி அடங்கும் என இன்று (மே 14) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 14, 2024

பிளஸ் 1 தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தல்

image

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரி 574, ஆபிநயா 568 மற்றும் மோனிகா 556 மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் 21 மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!