India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆண்டாள் (60) என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் மழை பெய்ததால் சாலையோரத்தில் மரத்தடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில் காலதாமதமாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு இதே ரயில் சற்று காலதாமதமாக காலை 9.20 மணிக்கு கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு புறப்படும் என ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் நேற்று வரை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை முதல் வினாடிக்கு 405 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் அணியிலிருந்து தமிழக பகுதிக்கு விவாதிக்க நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை 24.8 மி.மீ, தேக்கடி 6.மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் அடுத்த வெண்ணந்தூருக்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்
இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நள்ளிரவில் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நின்றுகொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவலர் உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை புதுக்கோட்டை , உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர், ஆண்டான் கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(11), விஷ்ணு(12), மாரிமுத்து(11). நண்பர்களான மூவரும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இன்று(மே 14) நீச்சல் பழக சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூவரையும் சடலமாக மீட்டனர். கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கும் நிலையில், 3 சிறுவர்களின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

புதுவையில் இணைய வழி குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நேற்று சைபர் கிரைம் போலீசார் 1930 என்ற உதவி மைய எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த எண்ணை தொடர்பு கொண்டவுடன் நேரடியாக சைபர் கிரைம் போலீஸ்க்கு இணைப்பு செல்லும்.24 மணி நேரமும் இந்த எண்ணில் வரும் புகார்களை விசாரிக்க முதலில் திட்டமிட்டு இதற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.