India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வந்ததால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் வெப்பத்தை தணிக்கும் விதமாக, சில பகுதிகளில் இன்று(மே 8) அதிகாலை திடீரென மழை பெய்தது. சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, தாம்பரம், பல்லாவரம், நந்தனம், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சற்றே குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக சரிவர மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றன . அடிக்கடி மின்தடை ஏற்படுவதனால் தொழிலாளர்கள் குழந்தைகள், பெரியவர்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மின்தடையை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றதால் வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, நொய்யல், குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட யாதவர் தெருவில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் மின் கசிவு ஏற்படுகிறது . இதை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவர் கலா சதீஷ் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தார். மின்வாரியத்திடம் மூன்று தடவை தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மின்வாரிய அலுவலகம் முன்பாக கலாசதீஷ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்

கொள்ளிடம் ஒன்றியத்தில் சிறப்பாக கல்வி பணியாற்றிய 19 ஆசிரியர்கள் இந்த வருடம் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானப் புகழேந்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்று ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுடைய பணிகளை பாராட்டி சிறப்புரை ஆற்றினர்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி ஈரோடு உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி தேனி உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, ராமநாதபுரத்தில் மே 13ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருப்பத்தூர் உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.