Tamilnadu

News April 25, 2024

குண்டு சுடும் பயிற்சி

image

தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அணைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வருடம் தோறும் குண்டு சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குண்டு சுடும் பயிற்சி தளத்தில் வருகின்ற 26.04.2024 முதல் 18.05.2024 வரை தேனி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினருக்கு குண்டு சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 25, 2024

கோழி கழிவு கொண்டு வந்த லாரி சிறை பிடிப்பு

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இருமாநில எல்லை பகுதிகளில் தீவர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகள் ஏற்றி குமரி மாவட்டத்தில் போட வந்த மெர்சடிஸ் பென்ஸ் லாரியை  மார்த்தாண்டம் பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

News April 25, 2024

கடலூரில் பக்தர்களுக்கு அன்னதானம்

image

திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகரில் உள்ள புட்லாயி அம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அதிமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கடலூர் சி.கே.எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

தி.மலை: அதிமுக சார்பில் திறப்பு

image

தி.மலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆரணி, சேவூர்,கண்ணமங்கலம் எஸ்வி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை தணிக்க இலவச தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் ஜெயசுதா தலைமையில் மாஜி அமைச்சர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கர், அசோக் குமார் பாண்டியன் பாரி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

தூத்துக்குடி: கணவன் தலைமறைவு.. மனைவி புகார்

image

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பாஸ்கர் வியாபாரியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும் இவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பாஸ்கர் திடீரென்று தலைமறை வாங்கி விட்டார். இது சம்பந்தமாக வெங்கடேஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

தி.மலை: தண்ணீர் பந்தல் திறப்பு

image

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில்   தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அதில்
முன்னாள் அமைச்சர், ராமச்சந்திரன்  கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

News April 25, 2024

பழனி: புதிதாக மின்சார வாகனம்

image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி வாகனமும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்று கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலைத்துறை அலுவலர்களும், கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் மின் வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக அதிகப்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 25, 2024

தனியார் பள்ளி  வாகனங்களில் ஆய்வு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக மூலம், மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களின் கூட்டாய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 25, 2024

சித்திரை திருவிழாவை காண வந்த 3 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

image

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண வந்த கல்குறிச்சியை சேர்ந்த ரேவதி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாந்தி ஆகிய இருவரிடம் 3 பவன் சங்கிலியையும்
வடக்கு சந்தனூரை சேர்ந்த காசியம்மாளிடம் 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் இம்மூவரும் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து இன்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!