Tamilnadu

News May 9, 2024

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா, வருகிற (மே 14) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மே 9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி

image

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எந்தெந்த படிப்பு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளது என்பது குறித்து வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர்.

News May 9, 2024

பெரியார் பல்கலை. மாணவர்கள் இங்கிலாந்து பயணம்

image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் வேலை வாய்ப்பு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்கௌட் (SCOUT) திட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் 2 மாணவர்கள் பெரியார் பல்கலை. இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News May 9, 2024

ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழப்பு

image

வாலாஜா தாலுகா தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக பிச்சைமணி என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் மின் மோட்டார் ஸ்விட்சை ஆப் செய்ய வீட்டில் நடந்து செல்லும் போது தரையில் வழுக்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை வாலாஜா போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 9, 2024

குமரி முன்னாள் எம்எல்ஏவுக்கு பிரதமர் புகழாரம்

image

தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவான குமரி மாவட்டம் பத்மநாபபுரம் முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இவரை போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாஜகவை கட்டி எழுப்பியவர்கள். ஏழைகளின் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்காக எப்பொழுதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

நாகர்கோவில் வல்லன்குமார விளையை சேர்ந்தவர் பாக்கிய லெட்சுமி(29), அரசு ஊழியர். இவர் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது கணவர் ராஜலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணமாகி 2 வருடம்தான் ஆவதால்  DO விசாரணை நடத்தி வருகிறார்.

News May 9, 2024

மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலை கோவில் வழி பகுதியில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் பொருட்களின் தரம் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் இன்று அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News May 9, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முலமாக நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளிமிடப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் tnresults.nic. இந்த என்ற இணையதள முகவரியில் நாளை காலை முதல் தெரிந்து கொள்ளலாம் எனவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!