India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.

தென்காசி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நாளை (மார்ச் 25 ) நடைபெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் இன்று மாலை திருவிழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாஸ்தா கோயில்கள் சுத்தப்படுத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் உள்ளன சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, அரக்கோணத்தில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, பெரம்பலூரில் இரா. தேன்மொழி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தமபாளையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ நாகராஜ் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டதில் அதில் ரூ.70000 உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அடிவாரம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செங்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டில் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வினோத்தை கைது செய்தனர்

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தஞ்சையில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரையில் வைத்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று தூத்துக்குடி , ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணி வாகன நிறுத்துமிடம், குடிநீர்,கழிவறை போன்ற வசதிகள் செய்வதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது
Sorry, no posts matched your criteria.