Tamilnadu

News April 17, 2024

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று (ஏப்ரல்.17) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் இன்று அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய மதுபானங்களை மதுப்பிரியர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

News April 17, 2024

ஜோலார்பேட்டை அருகே கரடி நடமாட்டம்

image

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில் நேற்று இரவு ஏலகிரி காட்டில் மச்சகண் வட்டம் பகுதியில் மோகன் என்பவரின் வீட்டின் அருகே நாய்கள் தொட்ர்ந்து குறைத்து கொண்டிருந்தது. மோகன் வெளியே வந்து பார்த்து போது கரடி ஒன்று  நடமாடியதை பார்த்த அவர் கூச்சலிட்டுள்ளார்.சத்தம் கேட்ட கரடி அங்கிருந்த காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 17, 2024

போதையில் இருந்தார் மோடி – முத்தரசன் தாக்கு

image

கச்சத்தீவினை மீட்க மோடி எந்த கடிதம் எழுதவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.10 ஆண்டு காலம் மோடி போதையில் இருந்தாரா என்று தெரியவில்லை. தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ரூ.7 ஆயிரம் கோடியை மோடி ஊழல் செய்து உள்ளார்.லாபத்தில் இயங்கி வந்த 23 பொது துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுதான் மோடியின் சாதனை. என கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்தார்.

News April 17, 2024

கோவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 4563 பேர்

image

கோவை நகரில் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை நகர போலீசார் 2763, ஊர் காவல் படையினர் 1150, தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 300, துணை இராணுவத்தினர் 350 என மொத்தம் 4563 பேர் கோவை நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், அதிவிரைவு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருப்பர் என கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

3 நாள் விடுமுறை: குவிந்த மதுப்பிரியர்கள்

image

நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் முன்பு சிறிய சச்சரவுகளை தடுக்க டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.

News April 17, 2024

பிரதமர் வேட்பாளர் யார்? – இபிஎஸ் விளக்கம்

image

சேலம் மக்களவை அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவையில்லை, மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்பியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என கூறினார்.

News April 17, 2024

பா.ஜ.க திருச்செந்தூருக்கு என்ன செய்தது – கனிமொழி

image

திருச்செந்தூரில் பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி. “ரூ. 500 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திருச்செந்தூரில் வெளிவட்டச்சாலை, திருச்செந்தூர் கோயிலை உலகம் வியக்கும் வகையில் மேம்படுத்தப்படும்” என்று கூறினார். மேலும். கோயில்களை காப்பாற்றுகிறோம் எனக்கூறும் பாஜக திருச்செந்தூருக்கு என்ன செய்தது? இந்துக்களை காப்பாற்றுவது போல ஏமாற்றுகின்றனர் என விமர்சித்தார்.

News April 17, 2024

சிறப்பு ரயில் சேவை

image

வெளியூரில் உள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னை தாம்பரத்தில் இருந்து நாளை 18 ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி தேதிகளில் மாலை 4.45 மணிக்கு அதிவிரைவில் ரயில் புறப்பட்டு காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைகிறது. அதே போல் மறுமார்க்கத்தில் 19, 22 ஆகிய தினங்களில் ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலையில் புறப்பட்டு காலை தாம்பரம் சென்றடையும். இத்தகவலை திருவனந்தபுரம் கோட்டை மேலாளர் கூறியுள்ளார்.

News April 17, 2024

63 வாக்குறுதிகளை தந்த வேலூர் எம்பி வேட்பாளர்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஏப்ரல் 16) தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் வேலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 63 வாக்குறுதிகளை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

image

மக்களைத் தேர்தல் 2024 ஏப்.19 இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏப்ரல் 19 அன்று கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக காய்,கனி, மலர், உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!