India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அவலூர்பேட்டை ரிங் ரோடு செல்லும் வழித்தடம் என்பதால் ரயில்வே கேட் இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்படும் போது ஏற்படும் போக்குவரத்து பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு 30 நிமிடங்கள் ஆகிறது. ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசாங்க நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே இதில் கடன் பெற விருப்பமுள்ளோர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 5 முதல் நேற்று மாலை வரை அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 42.8 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, திருவண்ணாமலையில் 5, செங்கத்தில் 4.2, போளூரில் 10, ஜமுனாமரத்தூரில் 1.6, கலசப்பாக்கத்தில் 17, ஆரணியில் 4.8, வந்தவாசியில் 10, கீழ்பென்னாத்தூரில் 7.2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் தொடா்ந்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். சொந்த வேலை காரணமாக இவரும் இவரது மகன்கள் ஹரீஷ்குமார் , சியாம்சுந்தர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் போடி தேனி மெயின் ரோட்டில் சென்றனர். அதிமுக அலுவலகம் அருகே சென்றபோது வேலன் என்பவர் காரை வேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் இன்று அதிகாலை மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த ஏழு பேரில் பார்வதி, சச்சின் என்ற சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் முன் விரோதம் காரணமாக மீன் கடை வியாபாரி செல்லதுரை, சாமி ஆகிய 2 பேரை நள்ளிரவில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான மணலி,குரும்பல், குன்னூர் தோளாச்சேரி , வரம்பியம் பள்ளங்கோயில் பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு 2ஆவது முறையாக காா்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதையடுத்து, இங்குள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் நகா் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் மகேஷ்குமாா், பிரியங்கா சிதம்பரம், ஆகியோர் கலந்து கொண்டனர்

திண்டுக்கல் பகுதியில் பெய்த கோடை மழையினால் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் இருந்த கட்டட சுவர்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அண்மையில் கட்டணக் கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா். இதனையடுத்து பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, இடியும் நிலையிலுள்ள சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

பழனி கோதைமங்கலம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை ராசாமணி என்பவர் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து கிணற்றை மீட்டனர். மேலும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.