Tamilnadu

News June 7, 2024

மயிலாடுதுறை: மழைக்கு வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (07.06.24) மாலை 4 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

ஓராண்டுக்குள் சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்

image

மதுரை செல்லூர் கண்மாயில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ. 4.65 கோடி மதிப்பீட்டில் கண்மாயைச் சுற்றி வேலி மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது 10அடி உயர மின் கம்பத்திற்கு 1/2 அடி கூட ஆழமிட்டு அடித்தளமிடாததால், ஓராண்டு முடிவதற்குள் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.

News June 7, 2024

தி.மலை: கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு சேர விரும்பும் மாணவர்கள் இன்று ஜூன் 7 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதை ஒட்டி மாணவர்கள் சேர்க்கையினை கருத்தில் கொண்டு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கால நீட்டிப்பு அவகாசம் வழங்கியது.

News June 7, 2024

புதுவண்ணாரப்பேட்டை அருகே விபத்தில் ஒருவர் பலி!

image

புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் டிஎச் சாலையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி வந்த பேருந்து மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் இறந்தவரின் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News June 7, 2024

வேலூரில் நீட்: அரசு பள்ளி மாணவர்கள் 41 பேர் தகுதி

image

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 267 மாணவ மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களின் 41 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். மருத்துவ படிப்புக்கான தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இந்த மாணவர்கள் தகுதிபெற்றனர் . அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை பேருக்கு சீட் கிடைக்கும் என்ற விவரம் மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கிற்கு பிறகு தெரியவரும் என்று கூறினர்.

News June 7, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழை நிலவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில்
நேற்று காலை முதல் கன மழையின் அளவுகள் சிவகங்கை-24. 00மி. மீ மானாமதுரை 60.00மி.மீ இளையான்குடி-36. 00மி. மீ, திருப்புவனம்-40. 60மி. மீ, திருப்பத்தூர்-2. 50மி. மீ,
காரைக்குடி-6.80 மி.மீ, தேவகோட்டை -25.0மி.மீ, காளையார்கோவில்- 26.40மி.மீ, சிங்கம்புணரியில்-மழை பெய்ய வில்லை மொத்தம் 221.30 மி.மீ மழை சிவகங்கை மாவட்டத்தில் பெய்துள்ளது.

News June 7, 2024

நாகர்கோவில்: தபால்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்

image

தபால்துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14.6.2024 காலை 11 மணிக்கு நாகர்கோவில் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. தபால் சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில், தெரிவிக்கலாம். தபால் மூலமாக 10ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்
என தபால் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

சிவகங்கை: மரக்கன்றுகளை நட்ட நீதிபதி

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார் . இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News June 7, 2024

முக்கிய அணைகளின் நீர்மட்ட விபரம்

image

பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று(ஜூன் 7) காலை 8 மணி நிலவரப்படி, சோலையாறு அணையின் நீர்மட்டம் 40.34 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 12.03 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 78.65 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 30.82 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 7, 2024

பெரம்பலூர்: முதல் பரிசு வென்று அசத்தல்!

image

திருச்சி மாவட்டம் பச்சைமலை நாகூர் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியில் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் அணிகள் பங்குபெற்றன. இதில் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த சஹாரா அணியினர் பங்குபெற்று முதல் பரிசைப் பெற்றனர். முதல் பரிசை வென்ற அந்த அணியினருக்கு ஊர் பொதுமக்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!