India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 13.07.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் காரை, உத்திரமேரூர் வட்டத்தில் காவித்தண்டலம் , வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிச்சிவாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் பூந்தண்டலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை கடலூர் மாவட்ட அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளில் சிதிலமடைந்து போன குடிநீர் குழாயை அகற்றிவிட்டு, புதிய பரிசோதிக்கப்பட்ட பாதுகாப்பான குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு புதிய மேம்பாலங்கள் கொண்டுவரப்பட்டன. அணை மேடு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் திறக்கப்படாமல் உள்ளது என்றார்.

விக்கிரவாண்டியில் தொகுதியில் 20 நாட்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் அன்புமணி, நாதக சார்பில் அபிநயா போட்டியிடுகின்றனர். இங்கு வரும் ஜூலை 10 வாக்குப்பதிவு, ஜூலை 13 வாக்கு முடிவு வெளியாகிறது. மேலும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக விக்கிரவாண்டியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 476 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படைவீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 17ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அவர்கள். மேலும், வாக்களிக்க ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் யாரும் நிறுவனங்களை இயக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

புதுவை காவல்துறை, காவல் துறையினரின் தொழில்முறைத் தரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்துடன் இன்று புதுவையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுவை காவல்துறை சார்பில் காவல்துறை இயக்குநர் டாக்டர் பி. ஸ்ரீனிவாஸ் ஐபிஎஸ் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூட்டானி ஆகியோர் கையொப்பமிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 15ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று (ஜூலை 8) தெரிவித்துள்ளார். அதன்படி 2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு அரசு உதவித்தொகை ரூ.200 முதல் ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர், தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று வருகின்ற ஜூலை 30-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நேரில் வழங்கி பயன்பெறுமாறு தருமபுரி ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.