India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (12/04/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை செட்டிபாளையத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே , மோடி எல்லாம் செய்கிறார் என்றார்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இந்திய கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை இன்று இரவு ராமநாதபுரத்தில் வெளியிடப்பட்டது.
துணைத்தலைவரும் வேட்பாளருமான நவாஸ் கனி, மாநில பொதுச் செயலர் அப்துல் சமது, மாநில பொருளர் ஷாஜகான், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் வெளியிட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17.4.2024 அன்று காலை 10 மணி முதல் வாக்களிக்கும் நாளான 19.4.24 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு இன்று மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த Renauld Triber என்ற வாகனத்தை சோதனை செய்ததில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் கிராமம், கட்டளை மேடு பகுதியை சேர்ந்த அருண்குமாரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1,10,400 பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் இன்று திருநங்கைகள் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தாண்டவர் கோவிலில் சில திருநங்கைகள் தவறான வேலைகளில் ஆணுறைகள் விற்பதை ஏற்க முடியாத நிலையில் கூத்தாண்டவர் கோவிலில் பணிவிடை செய்து வரும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் கோவிலில் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்தனர்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து சிபிஎம்-இன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோயிலில் ஒரு மாதமாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. மலை மீது உள்ள மண்டபத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி மற்றும் இன்று என இரண்டு கட்டமாக உண்டியலில் எண்ணிக்கை நடந்தது. ரொக்கம் ரூ.5,29 கோடி, தங்கம் 1196 கிராம், வெள்ளி 21,783 கிராம் , சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள் 717 கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோயிலில் இன்று நடைபெற்ற தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலைமீது மாலையில் நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். ரூ.2,000 கட்டணம் செலுத்தி தங்கதேர் இழுக்க முன்பதிவு செய்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்காலில் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு பட்ட மேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் 164 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.